விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் கோபி தன்னுடைய வீட்டை விற்க முடிவு செய்த நிலையில் ராமமூர்த்தி தன்னுடைய பூர்வீக சொத்துக்களை கோபியின் பெயரில் எழுதி வைப்பதாக கூறினார்.
எனவே கோபியும் அந்த வீட்டை விட்டு யாரையும் வெளியில் அனுப்பாமல் ஆனால் மீதம் 20 லட்சம் நீங்கள் தர வேண்டும் என கூறிய நிலையில் பாக்யாவும் இன்னும் ஆறு மாதத்திற்குள் உங்களுடைய பணத்தை தந்து விடுவதாக கூறியிருக்கிறார். அந்த வகையில் தொடர்ந்து ஒரு வாரம் பாக்யா கேட்டரிங் ஆர்டர் கிடைத்த காரணத்தினால் எட்டே நாளில் இரண்டு லட்ச ரூபாய் கடனை அடைத்துள்ளார்.
இது கோபிக்கு மிகப்பெரிய அதிர்ச்சனை கொடுத்து இருக்கிறது எனவே ராதிகாவிடம் எப்படி எட்டு நாளில் இரண்டு லட்சம் தர முடிந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீ ஐடில தான் வேலை செய்யுற ஆனா இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு இரண்டு மாதமாகும் என கூறுகிறார் எனவே ராதிகாவிற்கு இவ்வாறு கோபி பேசுவது பிடிக்கவில்லை. ராமமூர்த்தியும் கோபியை உனக்கு பொறாமை எனத் திட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் எழில் தான் ஒரு புதிய டிவி நிகழ்ச்சியில் பணியாற்ற இருப்பதாக கூறுகிறார்.
அனைவரும் உனக்கு பிடித்து தான் இத செய்றியா என கேட்க எழில் ஆமா என கூறுகிறார். பிறகு நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு வந்து பாக்யாவிடம் இத உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன் என தருகிறார் எனவே அந்த நியூஸ் பேப்பரை ஜெனி வாங்கி படித்துப் பார்த்துவிட்டு கேட்டரிங் ஆர்டருக்கான டெண்டர் விட்டிருக்காங்க எனக் கூறுகிறார்.
அதாவது முன்னாடி உங்களுக்கு கேட்டரிங் செய்ய வாய்ப்பு கிடைச்சதுல அந்த கம்பெனியில் தற்போது கேட்டரிங் வைப்பதற்காக ஆள் தேவைப்படுவதாக கூற அதற்கு செல்வி அதுதான் ராதிகா செய்ய விடாமல் தடுத்துட்டாங்களே எனக் கூற பிறகு பாக்யா ஜேனியிடம் இதுக்கு நம்பர் அப்ளை பண்ணலாமா என கேட்க ஜெனியும் பண்ணலாம் எனக் கூற பிறகு ஜெனியை கேட்டரிங் ஆர்டர் கிடைப்பதற்காக அப்ளை பண்ண வைக்கிறார். பாக்யாவிற்கு இந்த கேட்டரிங் ஆர்டர் கிடைத்த விட ராதிகாவின் மூஞ்சில் கறியை பூச இருக்கிறார் இதனால் ராதிகாவிற்கு பெருத்த அவமானம் ஏற்பட போகிறது.