விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு பணத்திற்காக அல்லாடி வருகிறார். அதாவது இன்றைய எபிசோடில் கோபி தன்னுடைய நண்பருடன் ஹோட்டலில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு லட்சம் கடன் கேட்கிறார்.
அப்பொழுது கோபி நண்பர் இத்தனை வருடமா பிசினஸில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை பார்த்து இருக்க எனவே பிசினஸ்க்கு தேவனே பணத்தை கேட்டிருக்க ஆனா வீட்டு செலவுக்கு இதுவரையிலும் கேட்டதில்லை எனக் கூறுகிறார். கோபியும் என்னால் செலவை கட்டுப்படுத்த முடியவில்லை என கூற அந்த நேரத்தில் ஜெனி கோபிக்கு போன் பண்ணி வீட்டிற்கு வர சொல்கிறார்.
கோபியும் வர பாக்கியா இரண்டு லட்சம் செக்கை தருகிறார் அனைவரும் 8 நாளில் இரண்டு லட்சம் கொடுத்திருப்பதை நினைத்து அதிர்ச்சடைகின்றனர். இதனை கோபியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவே பாக்யாவை திட்டி விட்டு வீட்டிற்கு கிளம்புகிறார். ராதிகாவிடம் செக்கை கொடுத்து எட்டு நாளுக்குள்ள இரண்டு லட்சம் பணம் கொடுத்துட்டா ஏதோ கேட்டரிங் தொடர்ந்து கிடைத்ததாம் கூற ராதிகாவும் கண்டிப்பாக கிடைக்கும் என சொல்ல அதற்கு கோபி எட்டு நாள்ல ரெண்டு லட்சம் கொடுத்துட்டா இன்னும் ஒரு மாசத்துல மொத்த பணத்தையும் அடைச்சுடுவா போல என கூறுகிறார்.
ஆனால் ராதிகா எப்பொழுதும் மண்டபத்தில் ஏதாவது பங்க்ஷன் நடந்து கொண்டே இருக்காது என சொல்ல அதற்கு கோபி ஆனா இப்போதெல்லாம் கல்யாணம், வளையாப்பு, பர்த்டே பங்க்ஷன் கூட மண்டபத்தில் தான் நடக்கிறது ஏன் ராதிகா நீ ஐடில தான் வேலை செய்யுற உன்னால கூட எட்டு நாள்ல ரெண்டு லட்சம் சம்பாதிக்க முடியாது இதனை சம்பாதிக்க நமக்கு இரண்டு மாசம் ஆகும் என பாக்யாவிடம் ஒப்பிட்டு பேச ராதிகாவிற்கு மிகவும் கோபம் வருகிறது.
எதற்கு என்ன அவங்க கூட கம்பேர் பண்ணி பாக்குறீங்க என கோபப்பட அந்த நேரத்தில் ராமமூர்த்தி வருகிறார் அப்பொழுது எட்டு நாள்ல பணம் கொடுத்திட்டான்னு ஆச்சரியமா இருக்கா உனக்கு பொறாமை கண்ணுல தெரியுது என கூறு கோபியை ராதிகா முன்பு அசிங்கப்படுத்துகிறார்.