விஜய் டிவியில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் இருந்து வருகிறது அந்த வகையில் கோபிக்கு இன்னும் வீட்டிற்காக 20லட்ச ரூபாய் பணம் தர இருக்கும் நிலையில் எப்படியாவது அதனை அடைக்க வேண்டும் என பாக்கியா நினைத்து வருகிறார்.
அதாவது கோபி இவர்களை வீட்டை விட்டு அனுப்ப முடிவு எடுத்து இருந்த நிலையில் ஈஸ்வரி, ராமமூர்த்தி இருவரும் கோபியை சந்தித்து அதுவும் உன்னுடைய குடும்பம் தான் இப்படி செய்யக்கூடாது அவர்களை வீட்டை விட்டு அனுப்பாத என கேட்க ராமமூர்த்தி கிராமத்தில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் உன்னுடைய பெயரில் எழுதி வைத்துவிடுகிறேன் என கூறுகிறார்.
அடுத்த நாள் வீட்டிற்கு வந்து அப்பா கிராமத்தில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் தன்னுடைய பெயரில் எழுதி வைப்பதாக கூறியுள்ளார் எனவே என்னுடைய வீட்டிற்கு வந்த சொத்துக்கள் பத்தாது கணக்கு பார்க்கும் பொழுது மீதி 20 லட்சம் ரூபாய் நீங்கள் எனக்கு தர வேண்டும் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதனை அடுத்து இன்றைய எபிசோடில் ஜெனி அமிர்தாவிடம் டீ கொடுத்து ஈஸ்வரிடம் கொடுக்க சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி அமிர்தாவை மிகவும் கேவலமாக திட்ட பிறகு ரூமிற்கு வந்த எழில் அமிர்தாவிடம் சாரி கேட்கிறார். மேலும் ஜெனியும் வந்து அமிர்தாவிடம் சாரி கேட்க பிறகு நிலா பாப்பாவுடன் ஜெனி விளையாடுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் பாக்யா செல்வி இருவரும் ஆஃபீஸ்சரை சந்திப்பதற்காக செல்ல அங்கு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து கேட்டரிங் ஆர்டர் இருப்பதாகவும் அனைத்தும் பெரிய பங்க்ஷன் உங்களால் செய்ய முடியுமா எனக்கு இருக்க கண்டிப்பாக தாங்கள் செய்வதாக பாக்கியா கூறுகிறார். இவ்வாறு இதன் மூலம் இவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் வர இருக்கிறது.
வீட்டிற்கு வந்தவுடன் இதனைப் பற்றி ஜெனி அமிர்தாவிடம் பேச இருவரும் சந்தோஷப்படுகின்றனர் தற்பொழுது தொடர்ந்து ஒரு வாரம் வேலை இருப்பதால் அதற்காக ஆட்கள் தேவை எனக் கூற இவர்களுடன் அமிர்தாவும் கேட்டரிங் வேலையை பார்ப்பதற்காக செல்ல இருக்கிறார். இவ்வாறு இதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை வைத்து கோபி கடனை அடைத்து விட்டு ஈஸ்வரி, கோபி அனைவரையும் வாயடைக்க வைக்க இருக்கிறார் பாக்யா.