விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது பலருடைய எதிர்ப்பிற்குப் பிறகு எழில், அமர்த்தாவின் திருமணத்தை பாக்யா வெற்றிகரமாக நடத்தி வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் அடுத்து பாக்கியா கோபியின் வீட்டை வாங்குவதற்கு எப்படி பணம் தயார் செய்யப் போகிறார் என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில் ஈஸ்வரி, ராமமூர்த்தி இருவரும் கோபியை சந்தித்து இந்த வீட்டை விட்டு யாரையும் வெளியில அனுப்பக்கூடாது என கூறுகிறார் ஆனால் கோபி அது எல்லாம் முடியாது என்பது போல் சொல்கிறார்.
மறுநாள் கோபி வீட்டிற்கு வந்து நீங்கள் பணம் தருவதாக சொன்ன இறுதி நாள் எது இதோட உங்களுடைய கெடு முடிந்து விட்டது எனவே வீட்டை விட்டு வெளியே எப்பொழுது போறீங்க என கேட்கிறார் அதற்க்கு அனைவரும் அதிர்ச்சியடைய பிறகு பாக்கியா கோபியை எதிர்த்து பேசுகிறார் அதற்கு ஈஸ்வரி அவன் பேசுவதற்கு கூட கூட நீ ஏன் பேசுற எனக் கூறி சண்டை போடுகிறார்.
கோபி என்னுடைய அம்மாவிற்காக நான் உங்களை விட்டு விடுகிறேன் அப்பா கிராமத்தில் இருக்கும் எல்லா நிலத்தையும் என்னுடைய பெயரில் எழுதி வைக்கிறார். ஆனால் அந்த பணம் என்னுடைய வீட்டிற்கு பத்தாது அது எல்லாம் கிராமத்தில் இருக்கிறது என்னுடைய வீடு சிட்டியில் இருக்கிறது எனவே இன்னும் 20 லட்சம் நீங்கள் எனக்கு தர வேண்டியது இருக்கிறது.
அதனை விரைவில் தர வேண்டும் எனக் கூற அதை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார். இதை கூறிவிட்டு கோபி சென்றவுடன் செழியன் நல்ல வேலை அப்பா யாரையும் வீட்டை விட்டு போக சொல்லல இன்னும் 20 லட்சம் தான் தர வேண்டியது இருக்கு என கூற அதற்கு ஜெனி ஏன் நீ அந்த பணத்தை தர போறியா என திமிராக பேசுகிறார் ஈஸ்வரி இந்த விஷயத்தை நீ தலையிடாதே என செழியனிடம் கூறுகிறார்.