விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது எழில் அமிர்தாவின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அதாவது ஈஸ்வரி விருப்பத்துடன் எழில் வர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் பிறகு தன்னுடைய மகனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பாக்யா ஒட்டுமொத்த குடும்பத்தையும் எதிர்த்து எழில் அமிர்தாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். எனவே அனைவரும் பாக்யா, எழில் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் வீட்டிற்கு பணம் தருவதாக எழில் சபதம் போட்ட நிலையில் அதற்கான கெடு இன்றுடன் முடிகிறது எனவே அனைவரும் கோபி வீட்டை விட்டு அனுப்பினால் எங்கே போவது என யோசித்து வருகின்றனர். அந்த நேரத்தில் பாக்யா தான் வாடக வீடு ஒன்றை பார்த்து வைத்திருப்பதை கூறுகிறார். மேலும் ஈஸ்வரி, ராமமூர்த்தி இருவரும் கோபி சந்தித்து இந்த வீட்டை காலி செய்ய நீ சொல்லக் கூடாது என கெஞ்சிகின்றனர்.
ஆனால் கோபி அடுத்த நாள் பாக்கியா, எழில் இருவரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்ல போகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் எழில் நிலாவை வெளியில் வைத்துக்கொண்டு நிற்கிறார் அப்பொழுது டியூஷன் போய்விட்டு வீட்டிற்கு வரும் இனியா நிலாவை தூக்கிக்கொண்டு கோபியின் வீட்டிற்கு வருகிறார்.
அங்கு அண்ணன் மகள் என்றால் நான் அத்தை தானே அப்பனா நீங்க தாத்தாவா என்னை கேட்க அதற்கு நான் தாத்தா கிடையாது என கோபி கூறுகிறார். அவனோட மகள் உனக்கு பேத்தி அப்புறம் என்ன நீ தான் தாத்தா என ராமமூர்த்தி கூற ராதிகா சிரிக்கிறார் எனவே கோபி அசிங்கப்பட என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கிறார்.