விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் தான் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலில் சமீப காலங்களாக எழிலின் திருமண எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது எழில், அமிர்தா இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அனைவரையும் எழுத்து பாக்கியா எழில் அமர்த்தாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ள நிலையில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாக்யாவின் மீது கோபத்திலிருந்து வருகிறார்கள். அதோட மட்டுமல்லாமல் கோபி வீட்டை காலி செய்ய சொன்ன நிலையில் பாக்கியா வாடகை வீடு ஒன்றை பார்க்க வைத்துள்ளார்.
இதை பற்றி தன்னுடைய குடும்பத்தினர்களிடம் கூற நாங்கள் யாரும் அங்கு வர முடியாது என கூறி வருகின்றனர். மேலும் ராமமூர்த்தியும் அது உன்னுடைய குடும்பம் இப்படி எல்லாம் செய்யக்கூடாது எனக் கூறியும் அதனை கோபி கேட்பதாக தெரியவில்லை. அதோட மட்டுமல்லாமல் ஈஸ்வரியும் நேராக கோபியின் வீட்டிற்கு சென்று பேசுகிறார்.
ஆனால் அடுத்த நாள் பாக்யாவிடம் நீங்கள் சொன்ன கேடு முடிந்து விட்டது வீட்டை விட்டு வெளியேறுங்கள் கூறுகிறார். எனவே இனிவரும் எபிசோடில் கோபி ஈஸ்வரியையும் தன்னுடன் அழைத்து செல்ல எழில், அமிர்தா, பாக்யா மூவரும் வீட்டை விட்டு காலி செய்து வாடகை வீட்டிற்கு செல்ல இருக்கின்றனர்.
எனவே வாடகை கட்டுவதற்கும், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காக பாக்யா கேட்டரிங் செய்ய ஆரம்பிக்கிறார். அந்த கேட்டரிங் தொழிலில் அமிர்தாவும் இணைந்து வேலை செய்ய போகிறார். இவ்வாறு பாக்கியாவின் கேட்ரிங்கில் புதிதாக அமிர்தாவும் இணைந்துள்ள நிலையில் இது குறித்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.