விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது அனைவரையும் எழுத்து பாக்கியா தன்னுடைய மகன் எழிலுக்கும் அமிர்தாவுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.
எனவே ஒட்டு மொத்த குடும்பமும் பாக்கியாவின் மீது கோபத்தில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் எழில் ஈஸ்வரியிடம் பேச முயற்சிக்கும் ஈஸ்வரி பேசாமல் இருந்து வருகிறார் மேலும் அவமானப்படுத்துகிறார். எழில், பாக்யா வாடகைக்கு வீடு பார்த்துள்ள நிலையில் அங்கு போகலாம் எனக் கூற நாங்கள் வர முடியாது என ஈஸ்வரி கூறுகிறார்.
இதனை அடுத்து செழியனும் நானும் ஜெனியும் அங்கு வர மாட்டோம் எனக் கூற வீட்டில் ஒரே சண்டையாக இருக்கிறது பிறகு ராமமூர்த்தி கோபி வீட்டிற்கு செல்ல அங்கு அந்த வீட்டை நாளைக்கு காலி செய்ய சொல்ல கூடாது அப்படி செய்தால் மனசாட்சி இல்லாதவன் நீ தான் எனக் கூற இப்ப மட்டும் என்ன மனசாட்சி இருக்கிறவனா சொல்றீங்க கோபி கூறுகிறார்.
மேலும் இவ்வாறு இவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும் நேரத்தில் ராதிகா இப்பொழுது இந்த சண்டை தேவைதானா எப்பொழுதும் வீட்டில் சண்டைதான் நடந்து கொண்டிருக்கிறது இங்கு வரவே மயூ பயப்படுகிறார் என கூற அதற்கு ராமமூர்த்தி நானா சண்டை போடுகிறேன் என்று சொல்கிறார். பிறகு கோபி இப்பொழுது நீங்களும் இனியாகவும் இங்குதான் இருக்கிறீங்க அம்மாவும் கூடிய சீக்கிரத்தில் வந்துடுவாங்க எனக் கூற அதற்கு ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
மேலும் செழியன், ஜெனிக்கு செய்ய வேண்டியதையும் நான் செய்வேன் என சொல்ல அதற்கும் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பிறகு அதுவும் உன்னுடைய குடும்பம் தான் என ராமமூர்த்தி கூற அதற்கு கோபி அதை எல்லாம் சவால் விடுவதற்கு முன்பு யோசிச்சிருக்க வேண்டும் எழில், பாக்யா இருவரும் வீட்டை விட்டு காலி செய்யத்தான் வேண்டும் என கூறுகிறார். இவ்வாறு கோபி ஈஸ்வரியும் வீட்டிற்கு வந்தவுடன் ராதிகாவிடம் மாட்டிக்கொண்டு படாத படப் போகிறார்.