ராதிகாவின் வீட்டிற்கு சென்று கோபியிடம் கெஞ்சிய ஈஸ்வரி.! ஆனாலும் பாக்கியா, எழிலுக்கு காத்திருந்த பேர் அதிர்ச்சி..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபி தற்பொழுது வீட்டை விற்க முடிவு செய்துள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதாவது எழில் கோபியிடம் வீட்டை வாங்கி விடுவதாக சவால் விட்டிருந்த நிலையில் எழில் பாக்யா இருவராலும் பணத்தை தயார் செய்ய முடியவில்லை. எனவே வேறு வழி இல்லாமல் ஈஸ்வரியின் அறிவுரையின்படி எழில் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். வர்ஷினியின் அப்பா வீடு வாங்குவதற்கு தேவையான பணத்தையும் தருவதாக கூறிய நிலையில் பிறகு பாக்யா தன்னுடைய மகனுக்கு பிடித்த அமிர்தாவை திருமணம் செய்து வைத்தார்.

எனவே அனைவரும் பாக்கியா எழில் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர் மறுபுறம் பல போராட்டத்திற்கு பிறகு எழில் அமிர்தா இருவரும் வீட்டிற்குள் வந்தனர். ஆனால் ஈஸ்வரி எனக்கு இவளை பிடிக்கவே இல்லை இவளோட சேர்த்து இந்த குழந்தையும் இருக்கணுமா என கோபப்பட்டு வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கோபியின் வீட்டிற்கு சென்று அங்கு இந்த வீட்டை நீ விற்கக் கூடாது நாங்கள் அனைவரும் அங்கே தான் இருப்போம் என கூறுகிறார். அதற்கு ராமமூர்த்தி கிராமத்தில் இருக்கும் என்னுடைய அனைத்து சொத்துக்களையும் உன்னுடைய பெயரில் எழுதி வைத்து விடுகிறேன் என சொல்ல உடனே கோபமடைந்த கோபி வீட்டிற்கு சென்று அங்கு பாக்யாவிடம் அப்பா கொடுக்கும் சொத்துக்கள் இந்த வீட்டை வாங்குவதற்கு பத்தாது.

எனவே இப்பொழுது இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூற அனைவரும் அதிர்ச்சடைகின்றனர் மறுபுறம் ஈஸ்வரி தான் சொல்லியும் கோபி இவ்வாறு கேட்பது பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கோபி பாக்கியா, எழில் இருவரை மட்டும் வீட்டை விட்டு அனுப்பப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.