விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் எழில் திருமணத்தை வைத்து கடந்த வாரங்களாக எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது ஈஸ்வரி, எழில், அமிர்தா, பாக்கியாவை வீட்டிற்குள் விட தடையாக இருக்கிறார்.
அதாவது ஈஸ்வரியின் கோரிக்கையின்படி எழில் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் இவர்களுடைய திருமண மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது. தாலி கட்ட போகும் நேரத்தில் பாக்கியா திருமணத்தை தடுத்து நிறுத்தி அனைவரையும் எழுத்து எழில் அமிர்தாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதன் காரணத்தினால் பாக்யாவின் மீது ஒட்டுமொத்த குடும்பமும் கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இன்றைய எபிசோடில் பாக்கியா, எழில், அமிர்தாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஈஸ்வரி வீட்டிற்குள் இவர்களை வரவிடாமல் வெளியே போங்க என சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். ஜெனி முதலில் அவர்களை வீட்டிற்குள் அழைச்சிட்டு போயிட்டு பேசிக்கலாம் என கூற அதற்கு செழியன் ஜெனியை அதட்டுகிறார்.
இதனை அடுத்து மறுபுறம் வீட்டிற்கு சென்றவுடன் கோபி இப்படி ஒரு திருமணம் நடந்திருக்கக் கூடாது அவனுடைய எதிர்காலம் என்னவாகும் எனக் கூற அதற்கு இனியா அண்ணனுக்கு அமிர்தாவை தான் மிகவும் பிடிக்கும் இது ஏற்கனவே எனக்கு தெரியும் என கூறுகிறார்.
ஒரு குழந்தை இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டது மிகவும் தவறு என கோபி கூற அதற்கு ராதிகா பாக்யா செய்ததுதான் சரி நீங்களும் ஒரு குழந்தை இருக்கும்பொழுது தான என்ன திருமணம் செய்து கொண்டீங்க என கேட்க அதற்கு கோபி எனக்கும் மூன்று குழந்தைகள் இருந்தது என பேசிக்கொள்கின்றனர். இவ்வாறு கோபி பாக்கியாவை திட்ட பாக்கியாவிற்கு ஆதரவாக ராதிகா பேசி வருகிறார்.