பாக்கியா, எழிலை வீட்டை விட்டு அனுப்பிய ஈஸ்வரி.! வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கோபி..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு வழியாக அமிர்தா, எழில் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது அதாவது கோபியிடம் இருந்து வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள எழில் ஒப்புக்கொண்டார்.

எனவே இவர்களுடைய திருமண ஏற்பாடுகளும் மிகவும் அமோகமாக நடைபெற்றது இப்படிப்பட்ட நிலையில் எழிலுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பாக்யா அமிர்தாவை அழைத்து வந்து அனைவரிடமும் சண்டை போட்டு எழில் அமிர்தாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் பாக்கியாவின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது. திருமணம் நடந்து முடிந்த உடன் எழில் பாக்யாவை தனியாக அழைத்து சென்று காலில் விழுந்து அழுகிறார் பிறகு அமிர்தாவின் மாமனார், மாமியார் நாங்கள் நிலாவை அழைத்துக் கொண்டு செல்கிறோம் எனக் கூற அதற்கு எழில், பாக்கியா இருவரும் முடியாது என கூறுகின்றனர்.

இந்நிலையில் பாக்கியா எழில் அமர்த்தாவை வீட்டிற்கு அழைத்து செல்ல அங்கு ஈஸ்வரி இங்கு எங்க வந்தீங்க அப்படியே வெளியில் நில்லுங்க எனக்கூறி பிறகு எழிலிடம் ஒரு குழந்தை இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்திருக்க உனக்கெல்லாம் வெக்கமா இல்லையா. உங்களுக்கு இந்த வீட்டில் இடம் கிடையாது எங்கேயாவது போங்க என கூறுகிறார்.

இவ்வாறு இவர்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற மறுபுறம் கோபி ராதிகா மற்றும் மயூவை இந்த வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஈஸ்வரி, ராமமூர்த்தி, செழியன், ஜெனி மற்றும் ராதிகா, கோபி அனைவரும் ஒன்றாக வாழ இருக்கிறார்கள். இவ்வாறு இதனை சாக்காக வைத்துக் கொண்டு தற்பொழுது கோபி எப்படியோ தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார்.