விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்தது பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா இனியாவிற்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதாவது தற்பொழுது பாக்கியாவிற்கு பெரிய கேட்டரிங் கிடைத்திருக்கிறது எனவே அதனை எப்படி நடத்த வேண்டும் என்பதற்காக தயார் செய்து வருகிறார் மேலும் இவருக்கு துணையாக அமிர்தாவும் மண்டபத்திற்கு செல்கிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் இனியா டியூஷனுக்கு செல்கிறார்.
அங்கு புதிதாக ஒரு பையன் வர அவன் இனியா பக்கத்தில் அமர்ந்து பேசுகிறார் இது இனியாவிற்கு மிகவும் பிடிக்கிறது எனவே இனியாவின் தோழி அந்த பையனிடம் பேச இனியாவும் தன்னை இண்ட்ரடியூஸ் செய்து வைத்துக் கொள்கிறார். பிறகு அந்தப் பையன் ஸ்மார்ட்டாக இருப்பதாக அவருடைய தோழி சொல்ல இனியா சிரிக்கிறார்.
இப்படி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இனியா ஒரு கட்டத்தில் அந்த பையனின் போன் நம்பர் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றவுடன் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்கிறார். இதனை ராதிகா பார்த்துவிட உனக்கு படிக்கிற வேலை கிடையாதா என்ன செஞ்சுகிட்டு இருக்கிற நல்லா படிச்சா தான் நிறைய மார்க் எடுக்க முடியும் உன்னுடைய பியூச்சரும் நல்லா இருக்கும் என கூறுகின்றார்.
பிறகு கோபி அவள் படிச்சுக்கிட்டு தானே இருக்கிறார் என கேட்க அவ படிக்கல ரொம்ப நேரமா யாரிடமோ பேசிட்டு இருக்கா யாரு கிட்ட பேசுற என கேட்க அதற்கு இனியா நீங்க யாரு என்ன கேட்க எனக்கூறி சத்தம் போட கோபி அதிர்ச்சடைகிறார். இவ்வாறு இனியா ஏற்கனவே ஒரு பையனிடம் பேசி ஏமாந்த நிலையில் தற்போது மீண்டும் வேறொரு பையனிடம் பேசுகிறார்.