எழில் அமிர்தாவுக்கு வில்லியாக மாறிய ஈஸ்வரி.! காதலை சின்னா பின்னமாக்க மாஸ்டர் பிளான்.. அதிர்ச்சியில் பாக்கியா

0
baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான மாற்றங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது பாக்கியா செகரட்டரி தேர்தலில் நிற்கிறார்.

எனவே இவருக்கு எதிராக கோபி தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவை நிற்கவைக்கும் நிலையில் அதற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது இப்படிப்பட்ட நிலையில் கோபி பாக்கியாவை விட்டு பிரிந்த பிறகும் தன்னுடைய தொழிலின் மூலம் தன்னம்பிக்கையுடன் இருந்து வரும் நிலையில் தற்போது ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

அதாவது இவருக்கு பெரிய கேட்டரிங் ஆர்டர் கிடைத்திருக்கும் நிலையில் அதற்கு முன்பு 7 லட்சம் அட்வான்ஸ் கொடுக்க வேண்டியுள்ளது எனவே அதற்கு லோன் போடுவதற்காக சென்ற நிலையில் பேங்கில் கோபியின் பான் கார்டு இருந்தால் தான் இந்த லோனை எடுக்க முடியும் என கூறியுள்ளார் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பெரிதும் வருத்தத்தில் இருந்து வருகிறார் பாக்யா.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் எழில் மிகவும் சோகமாக இருப்பதை நோட்டமிட்ட ஈஸ்வரி தொடர்ந்து அதைப்பற்றி கேள்வி எழுப்புகிறார் அப்பொழுது செழியன் எழில் அமிர்தா உறவைப் பற்றி ஈஸ்வரி இடம் கூறிவிடுகிறார் ஆனால் ஈஸ்வரி இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் எதிர்த்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இனி அமிர்தாவிடம் பேசக்கூடாது என சத்தியமாக உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் எழிலின் மனதை முழுவதுமாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஈஸ்வரி தற்பொழுது பிளான் ஒன்றை போட்டுள்ளார் அதாவது எழிலுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்து உள்ள நிலையில் இதற்கு எழில் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை.

தன்னுடைய பாட்டி சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா இல்லையென்றால் அனைவரின் பேச்சை மீறியும் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவே இனி மிகவும் விறுவிறுப்பான எபிசோடுகள்வுடன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.