விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்ற வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இனியா எப்படியாவது கோபியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக ராதிகாவின் வீட்டில் இருந்து வருகிறார். மேலும் இவருக்கு துணையாக ராமமூர்த்தியும் ராதிகாவின் வீட்டில் இருந்து வரும் நிலையில் கோபி இவர்களுக்கிடையே மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த எபிசோடில் ராதிகா சமைத்து வைத்துக் கொண்டு அனைவருக்காகவும் காத்திருந்தார் மேலும் இதனை சாப்பிட்டுவிட்டு அனைவரும் நன்றாக இருப்பதாக கூறுவார்கள் என நினைத்த நிலையில் கோபி எதுவுமே சொல்லவில்லை எனவே ராமமூர்த்தி 25 வருடங்களாக வகை சமைத்துக் கொடுத்த அவளுக்கே எதுவும் சொன்னதில்லை நீ எதிர்பார்த்தது தவறு என கூறுகிறார்.
இதனால் ராதிகா வருத்தப்படுகிறார் பிறகு கோபி சமாதானப்படுத்திய நிலையில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி இனியா வெளியில் சென்று இருக்கிறார்கள் மேலும் மையூ தூங்கி நிலையில் கோபி ராதிகா இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கோபி ராதிகாவை பார்த்து நீ மிகவும் அழகாக இருப்பதாகவும் உன்னை பார்த்துக்கொண்டே இருக்கலாம் எனவும் கூறிவிட்டு முத்தம் தர செல்கிறார்.
அப்பொழுது இனியா வந்து கதவை திறக்க உடனே கோபியை கீழே தள்ளி விடுகிறார் ராதிகா. இதனால் கோபிக்கு அடிப்பட்டு கத்த பிறகு இனியா என்ன ஆச்சு என கேட்கிறார் அதற்கு அவர் போன் கீழே விழுந்த மாதிரி இருக்கு அதான் தேடுகிறேன் என கூற போன் மேலே இருக்கு என கூறுகிறார் பிறகு ராதிகா சிரித்துக் கொண்டே ரூமுக்குள் செல்கிறார் இதனை பார்த்து கோபி ஏங்க பிறகு ராமமூர்த்தி பார்த்துவிட்டு முறைக்கிறார். இவ்வாறு ரொமான்ஸ் செய்ய கோபிக்கு ராதிகா பச்சைக்கொடி காட்டிய நிலையில் இனியா அதனை நடக்க விடாமல் செய்கிறார்.