விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியா எந்த ஒரு ஆர்டர் கிடைக்காமல் இருந்து வருவதால் புதிய முயற்சி செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்.
அதாவது பாக்கியா ஜெனி, செல்வியிடம் நாம் கேட்டரிங் ஆர்டர் கிடைக்கும் என நிறைய பொருளை வாங்கி வைத்திருக்கிறோம் அதனை வீணாக்க வேண்டாம் நம்மளுடைய ஆபீசின் முன் சமைத்து விற்கலாம் எனக் கூற அதற்கு செல்வி அங்கெல்லாம் வியாபாரம் போகாது என கூற ஏன் போகாது என பாக்யா கேட்கிறார்.
ஆனால் ஜெனி நீங்க முயற்சி செய்யுங்கள் என கூறுகிறார் எனவே எந்த ஒரு கேட்டரிங் ஆர்டரும் கிடைக்காத காரணத்தினால் பாக்கியா தற்பொழுது தள்ளு வண்டியில் உணவகத்தை நடத்த இருக்கிறார். மேலும் இதனைப் பற்றி ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் ஒன்றும் செய்ய வேண்டாம் எனக் கூற பிறகு ராமமூர்த்தி நீ செய்யுமா எதா இருந்தாலும் பாத்துக்கலாம் என கூறுகிறார்.
இதனை அடுத்து இனியா மிகவும் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார் இதனை ராமமூர்த்தி பாக்யாவிடம் கூற பாக்யா கவலைப்படுகிறார். எனவே இனியாவிற்கு கடிதம் எழுதி தர பிறகு இனியா அதனை படித்துவிட்டு அழுகிறார். அதில் பாக்கியா நீ நன்றாக படிக்க வேண்டும் நான் பட்ட அவமானங்களை நீ படக்கூடாது என கூறியுள்ளார்.
இவ்வாறு பாக்கியா இந்த முயற்சியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஒரு புறம் ராமமூர்த்தி கோபி ராதிகாவிற்கு இடையே பிரச்சனையை மூட்டிவிட ராதிகா மிகவும் கோபமாக இருக்கிறார். மேலும் வழக்கம் போல் கோபி ராதிகாவை சமாதானப்படுத்துகிறார். இவ்வாறு தொடர்ந்து இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.