விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த சீரியலை பார்த்து வருகிறார்கள். ஏனென்றால் பாக்யாவை அசிங்கப்படுத்தி வந்த கோபி தற்பொழுது ராதிகாவிடம் வசமாக மாட்டிக் கொண்டு படாத பாடுபட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீரியலின் கதையே மாறி உள்ளது என்றுதான் கூற வேண்டும் போராடி வரும் நிலையில் தற்பொழுது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் பாக்யாவிடம் சண்டை போட்டுக் கொண்டு இனியா கோபியின் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கோபிக்கு தெரியாமல் இனியா திட்டம் போட்டு வரும் நிலையில் இது பற்றி ராதிகாவிடம் எப்படியாவது என் அப்பாவை உங்களிடம் இருந்து பிரித்து எங்க வீட்டிற்கு கூட்டிக்கொண்டு செல்வேன் என சவால் எடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பாக்யாவின் வீட்டிற்கு சென்று வந்த இனியாவை கோபி எதற்காக அந்த வீட்டிற்கு சென்ற எனக் கேட்கிறார் ட்ரஸ் எடுக்க தான் சென்றேன் எனக் கூற பிறகு ராதிகா கோபியை முறைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா ராதிகாவின் பக்கத்தில் நின்று வில்லத்தனமாக முறைத்து விட்டு ரூமுக்குள் செல்கிறார்.
எனவே மீண்டும் ராதிகா கோபியை முறைக்க கோபி பம்புகிறார் இதன் காரணமாக தற்பொழுது இனியா இனி வரும் எபிசோடுகளில் கோபியை ராதிகாவிடம் இருந்து பிரிப்பதற்காக பல வேலைகளை செய்ய இருக்கிறார் இதன் காரணமாக கோபிக்கு ராதிகாவின் மீது கோபம் வரும் எனவே இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட இருக்கிறது.
இவ்வாறு கோபி அவஸ்தைப்பட ஒருபுறம் தற்பொழுது பாக்கியா செகரட்டரி பதவிக்கு நடக்க இருக்கும் தேர்தலில் நிற்கிறார் இதனை தெரிந்து கொண்ட கோபி படிக்காத பாக்யாவே சக்கரட்டரி தேர்தலில் நிற்கும் பொழுது நீ எதற்கு நிக்கக்கூடாது என ராதிகாவை நிற்க சொல்கிறார் எனவே இனிவரும் எபிசோடுகள் மிகவும் அதிரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது.