விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இனியாவும் தன்னுடைய அப்பாவை எப்படியாவது பிரித்து பாக்கியாவுடன் சேர்க்க வேண்டும் என்பதற்காக கோபி ராதிகாவுடன் தங்கி வருகிறார். மேலும் இனியாவிற்கு துணையாக கோபியின் அப்பா ராமமூர்த்தி இவர்களுடன் இருந்து வருகிறார் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் பாக்கியா எப்படியாவது கோபிக்கு தர வேண்டிய பணத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக கேட்டரிங் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நடந்த செக்கரட்டரி தேர்தலில் பாக்கியா வெற்றி பெற்ற நிலையில் ராதிகா கோபி இருவரும் பெருத்த அவமானத்தை சந்தித்தனர். எனவே பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ராதிகா நினைத்து வந்த நிலையில் பாக்கியாவிற்கு ராதிகா பணியாற்றி வரும் ஆபீஸில் கிடைத்த கேண்டின் வைப்பதற்கான ஆர்டரை தர விடாமல் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் பாக்கியா அடுத்த நாள் ஆபிஸரை சந்தித்து நடந்ததை கூறுகிறார் மேலும் அந்த ஆபீஸர் உங்களுக்கு இதற்கு மேல் நிறைய ஆர்டர்கள் வரும் என ஆறுதலாக பேசுகிறார். இவ்வாறு இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்க்கும் கோபிக்கு கோபம் வருகிறது எனவே ராதிகாவுடன் முதலில் பாக்யா சிரித்து பேசியதை பற்றி சொன்ன நிலையில் ராதிகா கோபமாக அவங்க என்ன செய்தால் உங்களுக்கு என்ன என கூறுகிறார்.
மேலும் வீட்டிற்கு சென்றவுடன் ராதிகா மயூவை அழைத்துக் கொண்டு சென்ற பிறகு உங்கள் மருமகள் என்ன செய்றா தெரியுமா? ஒரு ஆளோட சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருக்கா இது என்ன புதுப்பழக்கம் எனக் கூற அதற்கு ராமமூர்த்தி உனக்கு அவளுக்கும் தான் எந்த ஒரு சம்பந்தமும் இல்லன்னு ஆயிடுச்சில்ல அப்புறம் என்ன நீ கேக்குற என் மருமகளைப் பற்றி எனக்குத் தெரியும் என கூறுகிறார்.
இதனை அடுத்து மற்றொருபுறம் எழிலை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக வர்ஷினி தன்னுடைய அப்பாவிடம் தனது காதலைப் பற்றி கூறுகிறார் எனவே எழில் நல்ல பையன் தான் என் அவரும் இவருடைய காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் எழிலின் பாட்டியை சந்திக்க முடிவு எடுத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் எழில் யாருக்கும் தெரியாமல் பாக்யாவை அழைத்துக் கொண்டு அமிர்தாவின் மாமனார், மாமியாரை சந்திப்பதற்காக செல்கிறார்கள். இவ்வாறு அடுத்தடுத்து சுவாரசியமான எபிசோடுகள் இனிவரும் காலங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.