நான் எப்படி இருந்தா என்ன என் பொண்டாட்டி பத்டினியா இருக்கணுமா.? இது எந்த விதத்தில் நியாயம் கோபி…

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தற்பொழுது கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் பாக்கியாவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக ராதிகாவுடன் பாக்கியா வீட்டிற்கு எதிரில் இருக்கும் வீட்டில் தங்கி வருகின்றனர்.

முதலில் பாக்கியாவிற்கு எதிராக ராதிகா கவுன்சிலர் எலக்ஷனில் நின்ற நிலையில் அதிகபடியான வாக்குகளை பெற்று பாக்கியா வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த நிலையில் அதனை தாங்கிக் கொள்ள முடியாத ராதிகா எப்படியாவது பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என திட்டம் போட்டு பல வேலைகளை செய்து இருக்கிறார். அதாவது பாக்யா சமீபத்தில் லோன் வாங்கி பெரிய ஆர்டர் ஒன்றை வைத்திருந்த நிலையில் அந்த கேட்டரிங் அவருக்கு கிடைக்காத படி ராதிகா செய்துள்ளார்.

மேலும் பாக்கியா எப்படியாவது இந்த நஷ்டத்தை ஈட கட்ட வேண்டும் என்பதற்காக மண்டபத்தில் அவருக்குத் தெரிந்த ஆபிஸர் ஒருவரை சந்தித்து ஏதாவது ஆர்டர் கிடைக்குமா என கேட்கிறார். மேலும் அந்த ஆர்டர் கைவிட்டு போனதையும் நினைத்து வருத்தப்படுகிறார் பாக்கியா. எனவே இனிவரும் நாட்களில் நிச்சயம் மண்டபத்தில் நிறைய ஆடர்கள் வரும் என அந்த ஆபீஸர் ஆறுதல் கூறுகிறார்.

எனவே இவர்கள் இருவரும் ஹோட்டலில் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கோபியம் அங்கு இருக்கும் நிலையில் பாக்யாவை வேறொரு ஆணுடன் பார்த்த பிறகு கோபிக்கு பற்றி எரிகிறது. பிறகு பாக்கியா தன்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காக மறைந்து மறைந்து கோபியை ஓட்டு கேட்கிறார்.

எனவே இதனைப் பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் இந்த கோபம் தேவையில்லாத ஒன்று ஏனென்றால் கோபியும் இவ்வாறு தன்னுடைய சொந்த மனைவியை விட்டுவிட்டு ராதிகாவுடன் சுற்றி வந்தார் எனவே தற்பொழுது ராதிகாவிற்காக பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு இவ்வாறு கோபி கோபமடைவதை பார்ப்பது சரியில்லை என்று கூறி வருகிறார்கள் மேலும் கண்டிப்பாக பாக்கியாவை இதன் மூலம் வம்பு இழுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.