எழிலை வீட்டை வீட்டு துரத்திய அமிர்தாவின் மாமனார், மாமியார்.! அதிர்ச்சியில் பாக்யா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து பல சிற்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாக்கியலட்சுமி பல பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறார். அதாவது ராதிகா பாக்யா இருவரும் செக்ரட்டரி தேர்தலில் நின்ற நிலையில் பாக்கியா ராதிகாவை விட அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாறு பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ராதிகா தன்னுடைய ஆபீசில் பாக்யாவிற்கு கிடைக்க இருந்த கேட்டரிங் ஆர்டரை தரவிடாமல் செய்துள்ளார் எனவே பாக்கியா லோன் எடுத்து அதற்கான பொருட்கள் வாங்கிய நிலையில் அதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மற்றொருபுறம் இனியா எப்படியாவது தன்னுடைய அப்பாவை வீட்டில் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக முயற்சி செய்தும் கோபி இதுதான் என்னுடைய வீடு என ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

எனவே இனியாவை ஏதாவது ராதிகா செய்து விடுவாரோ என்ற பயமும் பாக்யாவிற்கு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் எழில் அமிர்தாவிடம் பேசிவிட்டு போனை வெளியில் வைத்து விட்டு சென்ற நிலையில் செழியன் அமிர்தாவிடம் பேசியது தெரிந்து கொள்கிறார் எனவே ஈஸ்வரியிடம் அவன் அமிர்தாவின் மீது அதிக காதல் வைத்திருக்கிறான் என கூற இதனை இப்படியே விடக்கூடாது என ஈஸ்வரி செழியனை அழைத்துக் கொண்டு அமிர்தாவின் மாமனார், மாமியாரை பார்ப்பதற்காக செல்கின்றனர்.

அங்கு உங்களுடைய மருமகளை என்னுடைய பேரன் தலையில் கட்டி வைக்கலாம் என நினைக்கிறீங்களா அது ஒரு பொழுதும் நடக்காது இனிமேல் அமிர்தாவை எழிலிடம் பேச கூடாது என சொல்லுங்க என எச்சரித்து விட்டு கிளம்புகின்றனர். இதனால் அமிர்தாவின் மாமனார் மாமியார் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் எழில் அவர்களை பார்ப்பதற்காக செல்ல இனிமேல் நீ இங்கு வரக்கூடாது நாங்கள் உன்னை அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள சொன்னோமா என வாசப்படியை விட்டு வெளியே அனுப்பி கதவை சாத்துகிறார்கள். எனவே வீட்டிற்கு வந்த எழில் பாக்யாவை கட்டி பிடித்து அழுகிறார். மேலும் அவங்க என்ன வீட்டிற்கு வரக்கூடாது என சொல்லிட்டாங்க என கூற நீ எதுக்கு அங்க போன என பாக்கியா கேட்கிறார். பிறகு எழில் ஏதோ நடந்திருக்குமா நாளைக்கு வந்து எனக்காக அமிர்தாவின் வீட்டில் பேசு எனக்கூறி அழுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.