விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் ராதிகா பாக்கியாவிற்கு எதிராக காலனி செக்கரட்ரி தேர்தலில் நின்ற நிலையில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் பாக்யா வெற்றி பெற்றுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் ராதிகா எப்படியாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் என நினைத்து வரும் நிலையில் பாக்யாவிற்கு ராதிகா பணியாற்றும் ஆபீசில் கேட்ண்டின் வைப்பதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது. மேலும் பாக்யா தன்னுடைய ஆபிசர் மூலம் லோன் போட்டு கேட்டரிங் நடத்துவதற்கு தேவையான பொருட்களை வாங்குகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவ்வாறு பாக்கியா கேட்டரிங் நடத்த இருப்பதை தெரிந்து கொண்ட ராதிகா தன்னுடைய ஓனரிடம் அவங்கள பார்த்தா நல்லா செய்வாங்கன்னு தோணவில்லை என கூறி அவருடைய மனதை மாற்றி விடுகிறார்.
பிறகு அவரும் பாக்கியா எழிலை வர சொல்லி இந்த கேண்டீன் ஆர்டர் உங்களுக்கு இல்லை என கூறிய நிலையில் பாக்கியா எழில் இருவரும் இதனை தெரிந்து கொண்டதும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வீட்டிற்கு சென்ற பாக்யா நடந்ததை ஈஸ்வரிடம் கூற ஈஸ்வரி இதெல்லாம் உனக்கு தேவைதானா கோபி சொல்றது சரிதான் என திட்டுகிறார். செழியனும் இதெல்லாம் உனக்கு வேண்டாம் அம்மா எனக் கூற இந்த நேரத்தில் ராமமூர்த்தி வருகிறார்.
பிறகு ராதிகா செய்ததை பாக்யா இராமமூர்த்தியிடம் கூற ராமமூர்த்தி ராதிகாவின் வீட்டிற்கு சென்று அங்கு ராதிகாவிடம் இதனை பற்றி கேட்கிறார் அதற்கு ராதிகா வீட்டில் சமைப்பவர்களை எல்லாம் அந்த கேண்டினில் சமைக்க வைக்க முடியாது அது என்னுடைய ஆபீஸ் எனக்கும் தான் அந்த பிரச்சனை வரும் என கூற இந்த நேரத்தில் கோபியும் ராதிகாவிற்கு சப்போர்ட் செய்ய பிறகு ராமமூர்த்தி அவர்கள் இருவரும் திட்டம் போட்டு தான் இப்படி செய்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்கிறார்.
இதனால் இனியா அதிர்ச்சி அடைய பிறகு ராதிகா எலக்ஷனில் தோற்றத்தை மனதில் வைத்துக்கொண்டு பழி வாங்குவதற்காக தான் இப்படி செய்து உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. இதனைப் பற்றி கவலைப்படாத கோபி ராதிகா இருவரும் வீட்டிற்கு வேலைக்காரி வைத்துக் கொள்ளலாம் என பேசி வருகிறார்கள் இந்த நேரத்தில் ராதிகா கோபிக்கு காபி போட்டு தர அது மிகவும் கேவலமாக இருப்பது போல் ரியாக்ஷன் கொடுக்கிறார்.