கோபிக்கு வக்காலத்து வாங்கி பாக்யாவை திட்டும் ஈஸ்வரி.! பழி வாங்கி விட்டோம் என சந்தோஷத்தில் இருக்கும் ராதிகா… பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பல திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு தான் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது காலனியில் நடந்த செக்கரட்டரி தேர்தலில் பாக்யா ராதிகாவை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனவே மேடையில் பேசும்பொழுது ராதிகாவை பாக்கியா தன்னைப் பற்றி முன்பு பேசியதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய நிலையில் தற்போது ராதிகா மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் எப்படியாவது பாக்கியவை பழிவாங்க வேண்டும் என ராதிகா நினைத்து வந்த நிலையில் அவருடைய ஆபீஸில் பாக்யாவிற்கு கேட்டரிங் பிசினஸ் கிடைத்தது. எனவே இதற்காக கடன் வாங்கி பாக்யா பொருட்கள் வாங்கிய நிலையில் இதனை தெரிந்து கொண்ட ராதிகா தன்னுடைய ஆஃபீசரிடம் பேசி பாக்கியாவிற்கு அந்த கேட்டரிங் ஆர்டரை தராமல் செய்துள்ளார்.

மேலும் அந்த ஆபீஸரும் பாக்கியா எழில் இருவரையும் தன்னுடைய ஆபீசுக்கு அழைத்து இதேபோல் கேட்டரிங் ஆர்டரை உங்களுக்கு தரவில்லை என கூறிய நிலையில் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பிறகு பாக்கியா எழில் இருவரும் கிளம்ப அந்த நேரத்தில் ராதிகா சொடக்கு போட்டு அவர்களை கூப்பிடுகிறார் அப்பொழுது இந்த ஆர்டர் உங்களுக்கு எப்படி கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு போங்க என சொல்ல இதுதான் என்னுடைய ஆபீஸ் நான் இங்கு என்ன சொன்னாலும் அது நடக்கும் நான் தான் இந்த ஆர்டரை உங்களுக்கு தரவிடாமல் செய்தேன் எனக் கூறுகிறார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு என்னா பேச்சு  பேசினீங்க எனக் கூறி சிரிக்க பிறகு எழில் ராதிகாவிடம் சண்டை போடுகிறார் உடனே பாக்கியா அவங்க கிட்ட பேசி உன்னுடைய தகுதியை குறைத்துக் கொள்ளாத எனக் கூற உடனே ராதிகா பார்த்து பேசுங்க பாக்யா என கூறுகிறார் இப்படிப்பட்ட நிலையில் வீட்டிற்கு சென்றவுடன் பாக்யா எழில் இருவரும் நடந்ததை தன்னுடைய குடும்பத்தினர்களிடம் கூட ஈஸ்வரி கோபப்படுகிறார் கோபி சொல்வது சரிதான் எனவும் கூறி பாக்கியாவை காயப்படுத்துகிறார்

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment