விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது அந்த வகையில் கோபி ராதிகாவை திருமண செய்து கொண்டதற்கு பிறகு தான் மிகவும் சுவாரஸ்யமாக இருந்து வருகிறது எனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் கோபி பாக்கியாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக செகரட்டரி தேர்தலில் பாக்யாவிற்கு எதிராக ராதிகாவை போட்டியிட வைத்த நிலையில் அதிகபடியான வாக்குகளை பற்றி பாக்யா வெற்றி பெற்றார். மேலும் ராதிகாவை பழிவாங்கும் எண்ணத்தில் படிக்காதவர்களுக்கு எதுவும் தெரியாது என யார் சொன்னது கிராமத்தில் இருப்பவர்களுக்கு தான் பல விஷயங்கள் தெரிந்திருக்கும் என கூறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் வீட்டிற்கு வந்த பிறகு பாக்யா எழிலை அழைத்துக் கொண்டு மேனேஜரை சந்திப்பதற்காக செல்கிறார் அவரும் லோன் கொடுத்த நிலையில் பிறகு கேண்டின் வைக்கும் ஆஃபீஸிற்கு சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில் அந்த மேனேஜர் இன்னும் இரண்டு நாட்களில் நீங்கள் கேட்டரிங் நடத்த ஆரம்பிக்கலாம் என கூற பாக்யா எழுதிய மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வருகிறார்கள்.
பிறகு இவ்வாறு சின்ன பிசினஸ் செய்ய ஆரம்பித்து தற்பொழுது கேட்டரிங் வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளோம் என கூறி பாக்யா மகிழ்ச்சி அடைய பிறகு இந்த தகவலை வீட்டில் இருப்பவர்களிடம் கூறுகிறார்கள் ஈஸ்வரி இதற்கு இவ்வளவு செலவாச்சா என கேட்க பிறகு ஏழில் அதற்கு விளக்கம் அளிக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இதனை தெரிந்து கொண்ட ராதிகா தன்னுடைய ஓனரை சந்தித்து அவர்களை பார்த்தால் நல்ல ஆள் போல் தெரியவில்லை அவர்களால் கேட்டரிங் சரியாக நடத்த முடியுமா என தெரியவில்லை ஏன் அவர்களிடம் கேட்டரிங் கொடுக்கிறீர்கள் என கூறி அந்த கேட்டரிங் ஆர்டரை பாக்யாவிற்கு தராமல் செய்கிறார் எனவே அந்த ஆபீஸரும் அடுத்த நாள் பாக்யாவிடம் இந்த கேட்டரிங் ஆர்டர் உங்களுக்கு தரவில்லை எனக் கூற பாக்யா அதிர்ச்சி அடைகிறார்.