விஜய் டிவியில் தற்பொழுது மிகவும் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று எபிசோடில் பாக்கியா அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். இதனால் ராதிகா கோபிக்கு பெருத்த அவமானம் ஏற்ப்பட்டுள்ளது. ராமமூர்த்தி அனைவரும் முன்பும் மேடையில் ஏறி பேச சொல்ல பாக்யா வேண்டாம் என சொல்கிறார்.
மேலும் யார் யாரோ பேசுகிறார்கள் உனக்கு பேச என்ன என ராமமூர்த்தி கேட்கிறார் பிறகு பாக்கியா ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி எனக்கூற அப்போது கோபி அங்கிருந்து கிளம்புகிறார் ஆனால் செல்வி சார் அக்கா பேசுவதை கேட்டுட்டு சொல்லுங்கள் என கூறுகிறார் பிறகு பாக்யா செக்கரட்டரி வேலை என்பது கஷ்டமாகத்தான் இருக்கும் அது எல்லாம் தெரிந்து தான் தேர்தலில் நிற்க ஒப்புக்கொண்டேன்.
ஒரு நாள் மாமா குடும்பத்தை பார்ப்பவர்கள் தான் இந்த ஏரியாவையும் பார்த்துக் கொள்ள முடியும் என சொன்னார் அதுபோல சமூகம் என்பது பெரிய கூடும் அதனால் என் குடும்பத்தைப் போல இந்த சமூகத்தை பார்த்துக் கொள்வேன் என சொல்கிறார் பிறகு பாக்யா என்னை ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பாலிலேயே நிறுத்திவிட்டேன் என பலரும் கிண்டல் செய்தார்கள் ஆனால் சிட்டியில் இருப்பவர்களை விட கிராமத்தில் இருப்பவர்கள் அதிக அளவில் தெரிந்து வைத்திருப்பவர்கள் என கோபி ராதிகாவை குத்தி காட்டி பேசினார். மறுபக்கம் செல்வி வாழ்க என சத்தம் போடுகிறார்.
ஈஸ்வரி வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்க பாக்கியா வருகிறார் அப்பொழுது செல்வி ஆரத்தி எடுக்கிறார் பின் ராமமூர்த்தி வந்து மாலை போட்டு பாக்யாவை சந்தோஷப்படுத்துகிறார் மேலும் ஈஸ்வரி செல்வி இந்த ஏரியாவில் இருக்கும் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும் என கூற பாக்யா ராதிகா பேசியதையும் கோபி பேசியதையும் நினைத்துப் பார்க்கிறார்.
பின் ராதிகா கோபி வீட்டிற்கு வர மயூரா நீங்க ஜெயித்து விட்டீர்களா என கேட்கிறார் ஆனால் கோபி மயூராவை உள்ளே போகச் சொல்கிறார். இந்த நேரத்தில் கோபி ராதிகாவிடம் பேசப் போக அப்பொழுது ராதிகா இந்த தேர்தலை நான் கேட்டேனா என கேட்க கோபி நான் கூட எதிர்பார்க்கவில்லை என சொல்ல எல்லோருக்கும் அவங்களுடைய தெரிந்திருக்கிறது.
ஆனால் உங்களை யாருக்கும் தெரியவில்லை என மிகவும் கோபமாக ராதிகா பேசுகிறார் இந்த அசிங்கத்தை எல்லாம் கேட்டேனா என்ன ராதிகா கோபமாக பேசுகிறார் பாக்யா நான் நினைத்தது போல இல்லை அவங்க வேற மாதிரி இருப்பதாக சொல்கிறார் மறுபக்கம் ராஜசேகர் சாரிடம் வாக்கியா லோன் கேட்டு செல்கிறார் அப்பொழுது அவர் எந்த பிரச்சனையும் இல்லை நான் பணம் தருவதாக கூறுகிறார் இதனால் பாக்கியாவுக்கும் லோனும் கிடைக்க பிறக அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.