விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தொடர்ந்து தங்களுடைய ஆதரவை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.
அந்த வகையில் ராதிகா பாக்கியா இருவரும் காலனி செக்கரட்டரி வேலைக்காக எதிரெதிரே போட்டி போட்டு வரும் நிலையில் யார் இதில் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் இன்னொரு புறம் கேட்டரிங் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பாக்யாவிற்கு பல வாய்ப்புகள் வருகிறது.
அந்த வகையில் ஒரு ஆபீஸில் கேட்டரிங் செய்ய வேண்டும் எனவும் ஆனால் அதற்கு முன் பணம் 7 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது எனவே பாக்யா லோன்க்காக பேங்க் போன நிலையில் அங்கு கோபியின் பான் கார்டு இருந்தால் தான் லோன் தர முடியும் என ஆபிசர் கூறிவிட்டார் எனவே பாக்யாவிற்கு லோன் கிடைக்கவில்லை என மிகவும் வருத்தத்தில் இருந்து வந்த நிலையில் பிறகு கேட்டரிங் ஆபிஸரை சந்திக்கிறார்.
அப்பொழுது இவ்வாறு எனக்கு பணம் பிரச்சனை இருக்கிறது என பாக்யா கூற அதற்கு அந்த ஆபீஸர் நான் உங்களுக்கு லோன் போட்டு தருகிறேன் என கூறுகிறார் இதனால் பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார். பிறகு வீட்டிற்கு வந்தவுடன் தேர்தல் நடைபெறுகிறது அந்த நேரத்தில் இனியா ராதிகாவிடம் என்னுடைய அம்மா தான் வெற்றி பெறுவாங்க என சவால் விடுகிறார்.
மேலும் ராமமூர்த்தியும் பாக்கியாவிற்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில் ராதிகா பாக்கியா இருவரில் யார் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது எனவே இதற்கான ரிசல்ட் இன்றைய எபிசோடில் தெரியவரும் மேலும் இந்த தேர்தலில் பாக்கியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது இதனால் கோபி ராதிகா இருவரும் அசிங்கப்பட போகிறார்கள்.