ராதிகாவை உசுப்பேத்தி பாக்கியாவை பழிவாங்க முடிவு செய்த கோபி.! வீட்டு வேலை செய்ற படிப்பறிவு இல்லாதவங்களா போட்டிக்கு வந்துட்டாங்க என பாக்யாவை கழுவி ஊற்றும் ராதிகா..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக மிகவும் சுவாரஸ்யமாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் டிஆர்பியில் முதலிடத்தையும் பிடித்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு ஏராளமான சுவாரசியமான காட்சிகள் இருந்து வரும் நிலையில் தற்போது கோபி பாக்யாவிற்கு எதிராக தேர்தலில் ராதிகாவை நிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

அதாவது இன்றைய எபிசோடில் பாக்யா தேர்தலில் நிற்பது பற்றி வீட்டில் கோபி கிண்டல் செய்து வரும் நிலையில் இதனை பார்த்து கடுப்பான ராமமூர்த்தி அவளை இந்த ஏரியாவுல எல்லாருக்கும் தெரியும் ஆனால் உன்னை யாருக்கு தெரியும் பாக்யா புருஷன் தான் உன்னை தெரியும் உனக்கு நிற்க தைரியம் இருக்கா எனக் கேட்க பிறகு பொண்ணுங்க மட்டும் தான் நிக்கணும் என முடிவு பண்ணி இருக்காங்களே என கோபி சொல்கிறார்.

அதன் பிறகு நான் தான் தேர்தலில் நிற்க முடியாது ஆனால் என்னோட மனைவி ராதிகாவை இந்த தேர்தலில் நிற்க வைப்பேன் எனக் கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார் பிறகு ராதிகா ரூமிற்கு வந்ததும் நான் எதுக்காக இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என்னால் நிற்க முடியாது எனக் கூற கோபி நீ ஏன் நிற்கக்கூடாது என்னோட மனைவி நீ எல்லாருக்கும் தெரியணும்னு சொன்னல்ல இப்ப நீ ஜெயிச்சா செக்கரட்டரி புருஷன் என எல்லோரும் சொல்லுவாங்க என்கிறார்.

பிறகு ராதிகா உங்களோட பர்சனல் பழிவாங்கும் எண்ணத்துக்கு என்னால பலிக்காடு ஆக முடியாது என கூறுகிறார் மேலும் கோபி விடாமல் பேசி ஒரு வழியாக ராதிகாவை தேர்தலில் நிற்பதற்கு சம்மதிக்க வைத்து விடுகிறார். பிறகு மறுநாள் அசோசியேஷன் மீட்டிங் நடைபெறுகிறது முன்னாள் சக்கரவர்த்தி என்னோட மனைவி இந்த எலக்சன்ல நிற்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க என்கிறார்.

உடனே செல்வி அப்பொழுது எங்கள் பாக்கியா அக்கா தான் அன்ன போஸ்ட்டா ஜெயிச்சிடுவாங்கன்னு அறிவிச்சிடலாம் என கூற இல்லை பாக்யாவை எதிர்த்து இன்னொருவர் நிற்கிறார் என கூறுகிறார் அப்பொழுது கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு அசோசியேஷன் மீட்டிங்க்கு வருகிறார் இதனை பார்த்தவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். செக்கரட்டரி, கோபி, ராதிகா என அனைவரும் சேர்ந்து பாக்கியாவை அசிங்கப்படுத்துகிறார்கள்.