ராதிகாவுக்கு முத்தம் கொடுப்பதை எட்டிப் பார்த்த பாக்யா.! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவா என எகிரி குதிக்கும் எழில்.! பரபரப்பாகும் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi-568
baakiyalakshmi-568

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வருகிறது அந்த வகையில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்த பிறகும் கூட கோபி ஃபுல்லாக குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார் அங்கு ராதிகா இப்பவும் குடிச்சிட்டு வந்திருக்கீங்களா என கேட்க அதற்கு ஆமா என கோபி கூறுகிறார்.

மேலும் நான் முன்னாடி எல்லாம் ரொம்ப குடிப்பேன் என்னால ஒரே அடியா நிறுத்த முடியாது கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கிறேன் நீ மையூவ பார்த்தியா என கேட்கிறார். அதற்கு ராதிகா இல்லை எனக் கூற பிறகு நீங்க மையூவ நல்லா பாத்துப்பீங்க அன்பா இருப்பிங்கன்னு கல்யாணம் பண்ண ஆனா இப்படி அவளை அழ வைத்துவிட்டீர்களே எனக்கூறி பீல் பண்ணுகிறார்.

இந்த நேரத்தில் கோபி இதற்கு மேல் உன்னையும் மையூவையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் மையூவ எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக் கூற பிறகு தனது நெஞ்சில் ராதிகாவை சாய்த்து கொள்கிறார். மேலும் நெத்தியில் ராதிகாவிற்கு முத்தம் கொடுக்க இந்த நேரத்தில் கரெக்டா பாக்கியா கதவை திறக்கிறார். இதனைப் பார்த்த ஷாக்கான பாக்யா பிறகு வெளியில் வந்து விடுகிறார்.

அதன் பிறகு தான் அனைவருக்கும் தெரிய வருகிறது பாக்கியா இனியா தங்கியிருந்த ரூமில் ராதிகா கோபி தங்கி இருக்கின்றனர் எனவே அனைவரும் கடுப்பாக பிறகு பாக்கியா ஹாலில் படுத்துக் கொள்வதாக கூறுகிறார். எனவே ஜெனி இனியாவை தன்னுடைய ரூமுக்கு அழைத்து செல்ல செழியன் நீ எதற்கும் கவலைப்படாத பாத்துக்கலாம் என இனியாவிற்க ஆறுதல் கூறுகிறார்.

இதனை அடுத்து எழில் உங்களுக்கு இது நல்லா இருக்கா எதுக்கு இனியா, அம்மா தூங்குற ரூம்ல நீங்க தங்கி இருக்கீங்க என கேட்க அதற்கு நீ தான் என் ரூம்ல  தங்கி இருக்க அதனாலதான் நான் இங்க தங்கி இருக்கேன் எனக் கூறுகிறார் இவ்வாறு பேசிக்கொள்ளும் நேரத்தில் பாக்யா எழிலை அழைக்க ஆட்டுக்குட்டி போங்க கூப்பிடுறாங்க என எழிலைக் கலாய்க்க இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.