விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் மூர்த்தி பாக்கியாவிற்கு இனியா மாத்திரை சாப்பிட்டுவிட்டு ஹாஸ்பிடல் சேர்த்திருப்பதைப் பற்றி கூற பாக்யா பதறி அடித்து எழிலை எழுப்பி விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர்.
ஹாஸ்பிடல் வந்த பிறகு பாக்யா ராமமூர்த்தியிடம் அவளுக்கு என்ன ஆச்சு? எப்படி இருக்கா? என கேட்க அதற்கு ராமமூர்த்தி டாக்டர் உள்ள ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க என சொல்ல உடனே நான் அவளை பாக்கணும் என பாக்கியா அடம் பிடிக்கிறார். அதன் பிறகு கொஞ்சம் அமைதியாக இருமா என சமாதானப்படுத்துகிறார் ராமமூர்த்தி இவரை தொடர்பு எழில் என்ன ஆச்சு என கேட்க அதற்கு காரணம் இவங்க ரெண்டு பேரும் தான்.
திட்டுனாங்க அந்த கோபத்துல அவ இப்படி பண்ணிட்டா என்ன சொல்ல எழில் கோபியிடம் சண்டை போட கோபி நாங்களும் டென்ஷன் ஆகத்தான் இருக்கும் நான் அவளை திட்டவில்லை கண்டுச்சோம் என சொல்கிறார். உடனே ராதிகா அப்படி ஒன்னும் எதுவும் சொல்லவில்லை அவ தப்பு செஞ்சா அதை கண்டித்தோம் என சொல்ல அவளை கண்டிக்க நீங்க யாரு என எழில் கேட்கிறார்.
பிறகு டாக்டர் ரெண்டு பேர் மட்டும் இனியாவை பார்க்க சொல்ல கோபி உள்ளே போக ராதிகா மற்றும் பாக்கியான இருவரும் உள்ளே போக முயற்சி செய்கின்றனர் போகட்டும் அவதான் பெத்தவ என சொல்லி ராதிகாவை தடுத்து நிறுத்துகிறார். பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்க கோபி இனியாவிடம் பேச இனியா பதில் எதுவும் பேசாமல் இருக்கிறார் அதே சமயம் பாக்யா உள்ளே வந்ததும் இனி அம்மா என பேசி கட்டி பிடித்துக் கொள்கிறார்.
கோபி பேசிக் கொண்டிருக்க இனியா எதற்கும் கண்டுகொள்ளாமல் பாக்யாவிடம் மட்டுமே பேசி வருகிறார் உடனே பாக்யா முத்தம் கொடுத்து ஆறுதல் கூறுகிறார். இதை பார்த்த கோபி மனம் வருத்தத்துடன் வெளியே வருகிறார் வெளியே வந்ததும் நான் உங்க பின்னாடி உள்ளே வர முயற்சி பண்ண ஆனால் என்னை உள்ள விடல பாக்யா எதுக்கு உள்ள வரணும் என வாக்குவாதம் செய்யப் கோபி இப்படி எல்லாத்துக்கும் சண்டை போட்டு சண்டை போட்டதுதான் அவ இப்ப இங்கு வந்து படுத்து இருக்கா என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு கோபி ராதிகா மற்றும் மயூவை வீட்டில் விட்டு வருவதாக சொல்ல நீங்க இங்கிருந்து என்ன பண்ணப் போறீங்க நீங்களும் வாங்க என ராதிகா சொல்ல நான் இங்கே கண்டிப்பாக இருக்கணும் இனியா என் பொண்ணு என்ன கூறுகிறார். பிறகு ராதிகா நானே போகிறேன் என மயுவை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு செல்கின்றனர். மறுபுறம் அமிர்தா மற்றும் ஈஸ்வரி பாட்டி இனியா ஹாஸ்பிட்டலில் இருப்பதைத் தெரிந்துக் கொண்டு பிறகு ஈஸ்வரி செழியனை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புகின்றனர்.