விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ராதிகா கோபி பாக்யாவின் வீட்டில் வாழ ஆரம்பித்துள்ளனர். எனவே இதனால் பல பிரச்சனைகள் உருவாகி வருகிறது அந்த வகையில் இன்றைய எபிசோடில் செழியன் மாடியில் தனியாக நின்று அழுதுக் கொண்டு இருக்கிறான் இதனைப் பார்த்த எழில் ஏன் இப்ப அழுவுற முதல்ல கண்ண தொட என கூறுகிறார்.
அப்பா ஏன் இப்படி பண்றாருனு தெரியல அவரு பாவம் என்று தான் நான் அழைச்சிட்டு வந்தேன் என கூற ஆனால் அவர நீங்க அழைச்சிட்டு வந்தது தப்பு என எழில் கூறுகிறார். அப்பாதான் அந்த வீட்டில விடக்கூடாது என கெஞ்சுனாரு அதனால பாவம்னு அழச்சிட்டு வந்த இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை என கூறி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மறுபுறம் கோபி தனது நண்பருடன் இணைந்து மறுபடியும் குடிக்கிறார் அப்பொழுது நான் செய்தது மிகப்பெரிய தவறு எனக்கூறி பேசிக் கொண்டிருக்க அவர் குடித்தது போதும் என கூறியும் கோபி நிறுத்தாமல் ஃபுல்லாக குடித்துவிட்டு என் வாழ்க்கையை நாசமா போயிடுச்சு என்னால தான் இவ்வளவு பிரச்சனையும் எனக் கூறி புலம்புகிறார்.
இதனை அடுத்து ஈஸ்வரி, பாக்யா, ராமமூர்த்தி என அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க இந்த நேரத்தில் கோபி வந்துட்டானா என ஈஸ்வரி கேட்கிறார் அதற்கு இன்னும் இல்லை என இனியா சொல்கிறார். பிறகு பாக்கியா இனியாவை வீட்டில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் நீ படிக்கிறதுல கோட்டை விட்டுடாத என சொல்ல அதற்கு ராமமூர்த்தி ஒரு புள்ளைக்கு பரீட்சை இருக்கு ஒழுங்கா படிக்கணும் என்ற அக்கரை கூட அவனுக்கு இல்லை எனக்கூறி திட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்படி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் வீட்டு காலிங் பெல் அடிக்கின்றது போய் பார்க்கும் பொழுது ராதிகா என்ற பெயரில் ஃபுட் ஆர்டர் பண்ணி இருப்பதாக பாக்கியாவிடம் கூறுகின்றனர். பிறகு ராதிகா வர அவரிடம் டெலிவரி பாய் நீங்க அந்த வீட்ல தானே இருந்தீங்க இப்ப இங்க இருக்கீங்க என கேட்க நாங்க சும்மா அது ரெண்டுக்கு இருந்தோம் இதுதான் எங்களுடைய சொந்த வீடு எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு பாக்கியா போன் பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் கோபி ஃபுல்லாக குடித்துவிட்டு வருகிறார் பாக்யாவை பார்த்துக் கொண்டிருக்க பிறகு பாக்கியா அங்கிருந்து சென்று விடுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.