பாக்கியாவை வீட்டை விட்டு துரத்துவேன் என ஈஸ்வரியிடமே சவால் விடும் ராதிகா.! முதல் நாளே ஆட்டம் காணும் பாக்கியா குடும்பம்..! பரபரப்பாகும் எபிசொட்

baakiyalakshmi-356
baakiyalakshmi-356

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கோபியுடன் ராதிகா பாக்யாவின் வீட்டில் வாழ முடிவெடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் கோபி நடந்த பிரச்சனையினால் கடுப்பில் உட்கார்ந்து இருக்க அப்பொழுது ராதிகா கோபியின் பக்கத்தில் அமர்ந்து என்னை மன்னித்து விடுங்கள் கோபி நீங்க என்ன விட்டு பிரிஞ்சிடுவீங்களோன்னு பயமாயிருக்கு நான் பண்றது பார்த்தா உங்களுக்கு டார்ச்சராக தான் தெரியும் ஆனால் இவங்க எல்லாம் என்கிட்ட இருந்து உங்களை பிரிச்சிடுவாங்க என கூறுகிறார்.

மேலும் ராஜேஷ் பண்ணதெல்லாம் ஞாபகம் இருக்கு எனவே அதெல்லாம் நினைச்சா எனக்கு பயமாக இருப்பதாக கூற அதற்கு கோபி அப்படியெல்லாம் இல்ல ராதிகா என தோளில் சாய வைத்துக்கொண்டு நைட்டு என்ன நடந்துச்சு என்ன ஆச்சு என்னை எதுவுமே தெரியாது தண்ணி தாகமா இருப்பதாக கூறுகிறார். உடனே கோபி தண்ணி ஆர்டர் பண்ற என சொல்ல அதற்கு ராதிகா ஏன் இப்படி பண்றீங்க இனிமே நாம இங்கதான் இருப்போம்னு முடிவு ஆயிடுச்சு கீழே போய் குடிக்கலாம் என கூற எனக்கு அங்க போகவே பயமாயிருக்கு ஒரு மாதிரி இருப்பதாக கூறுகிறார்.

கோபி இவ்வாறு கூறியும் ராதிகா தண்ணீர் எடுப்பதற்காக கீழே செல்கிறார் அங்கு செல்வி கண்டவாங்கலாம் ஏன் அக்கா உன்னோட சமையல் அறைக்க வரணும் என கேட்க அதற்கு செல்வியை நீ வேலைக்காரி தானே உன்னோட வேலையை மட்டும் பாரு என கூறுகிறார். இவ்வாறு ஜெனி, அமிர்தா என மாறி மாறி பேசி கொள்கின்றனர்.

பிறகு பாக்கியா பிரண்டு பிரண்டு என்று சொல்லிட்டு என நிறைய பேரு ஏமாத்தினாங்க நீ எப்ப இருந்தாலும் என் கூட தான் இருப்ப என செல்விக்கு ஆதரவாக பேசுகிறார். இதனை அடுத்து ராதிகா செல்ல இதனை பார்த்த ஈஸ்வரி இந்த வீட்ல இருந்து உன்ன அனுப்பிட்டு என் பையன என்கூடவே வச்சுக்கிறேன் இதை எழுதி வச்சுக்க என சவால் விடுகிறார்.

அதே போல் ராதிகாவும் பாக்கியாவை இந்த வீட்டில் இருந்து அனுப்பிவிட்டு நான் தான் உங்கள் மருமகள் என உங்க வாயால சொல்ல வைக்கிறேன் நீங்களும் எழுதி வெச்சுக்கோங்க என சவால் விட்டுக் கொள்கின்றனர். இதனை எல்லாம் கேட்டு விட்டு பாக்யா என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் என கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.