விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது ராதிகா ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது கோபி குடித்துவிட்டு கிடந்ததால் செழியன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
இரவு முழுவதும் ராதிகா தூங்காமல் கோபிக்காக காத்திருந்த நிலையில் பிறகு பாக்யாவின் வீட்டின் முன் அவருடைய கார் நின்று அதை பார்த்து தனது அம்மாவிடம் கூறுகிறார் எனவே தனது அம்மாவின் அறிவுரையின்படி ராதிகா தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு கோபியின் வீட்டிற்கு வருகிறார்.
எனவே இவர் வருவதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் கோபியை இனிமேல் அங்கு வரமாட்டான் நானே அவனுடைய துணிகளை எடுத்துக் கொண்டு வர வேண்டும் என நினைத்தேன் ஆனால் நீயே எடுத்து வந்து விட்ட எனக் கூற அதற்கு ராதிகா இதற்கு மேல் நான் இங்கே தான் இருப்பேன் எங்கேயும் போகமாட்டேன் என கூறுகிறார்.
எனவே அனைவரும் அதிர்ச்சடைகின்றனர் பிறகு கோபி என்னுடைய புருஷன் நீங்க எல்லாம் அவருடைய சொந்தக்காரர்கள் அப்ப நான் இங்கதான் இருக்கணும் என கூறுகிறார் பிறகு பாக்யா ஈஸ்வரியிடம் இப்ப நான் என்ன அத்த பண்ணனும் நீங்க சொல்லுங்க என கேட்க அதற்கு ராதிகா அப்ப நா நீ வீட்டை விட்டு வெளியில போ உனக்கும் இங்கு இருக்கிறவங்லுக்கும் என்ன சம்பந்தம் நீ இந்த வீட்டை விட்டு வெளிய போ என கூற அனைவரும் கடுப்பாகின்றனர்.
உடனே எழில் நீங்க யாரு எங்க அம்மாவ வெளியில போக சொல்றதுக்கு இது எங்க வீடு என கூறுகிறார் பிறகு அவதான் எங்க மருமக நீ எங்க மருமக கிடையாது என சொல்ல உடனே இனியாகவும் இங்கு என்ன நடக்குது டாடி என கேட்க அதற்கு ராதிகா சொல்லுங்க கோபி நாம இங்கதான் இருப்போம் என்று சொல்லுங்கள் என கூறுகிறார்.
இதன் காரணத்தினால் ராதிகாவை ரூமுக்குள் அழைத்து சென்று கோபி பேச நான் உங்களுக்கு அதிக முறை போன் செய்து விட்டேன் நீங்க இங்க இருக்கனும்னு விருப்பப்பட்டதா வந்தீங்க நானும் அப்ப நான் இங்கதான் இருப்பேன் என கூற அதற்கு கோபி என்ன நடக்குதுன்னு தெரியாம பேசாத வா நம்ம வீட்டுக்கு போகலாம் என கூறுகிறார் ஆனால் ராதிகா விடாப்பில் இங்கே தான் இருப்பேன் என சொல்லி விடுகிறார்.
கோபி தொடர்ந்து சமாதானப்படுத்த முயன்றால் ராதிகா கோபியை தள்ளிவிட்டு வெளியில் வந்து நான் இங்கேதான் இருப்பேன் எங்கேயும் போகமாட்டேன் இங்க நான் இருக்கிறது பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வேண்டாம் இந்த வீட்டை விட்டு போகலாம் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.