விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் இனியா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதனை வைத்து இனிவரும் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. அதாவது இனியா டியூஷன் சென்று விட்டு தன்னுடைய நண்பருடன் பேசிக்கொண்டு மெதுவாக வீட்டிற்கு வரும் நிலையில் இதனை பார்த்த ராதிகா இனியாவை கண்டிக்கிறார்.
மேலும் வீட்டிற்கு வந்தவுடன் இதற்கு மேல் இனியா சைக்கிளில் போக வேண்டாம் தாத்தா அழைத்துக்கொண்டு வரட்டும் என கூற அதற்கு இனியா தாத்தாவால முடியலன்னு தான் சைக்கிள் வாங்குது என சொல்ல பிறகு ஆட்டோ ஒன்றை அரேஞ்ச் செய்து அதில் போய்ட்டு வரட்டும் என கூறுகிறார் அதற்கு கோபி ஏன் தேவையில்லாத செலவு என கூறுகிறார்.
பிறகு ராதிகாவை இனியா எதுத்து பேச அதற்கு கோபி நீ எப்ப பார்த்தாலும் அவளுக்கு மரியாதை தர மாட்டேங்குற அவ என்ன சொன்னாலும் சண்டை போடற போய் தூங்கு என கோபி திட்டியதால் பிறகு இனியா அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு அப்பா ரொம்ப மாறிட்டாரு இனிமே அந்த வீட்டுக்கு போக முடியாது அம்மா கிட்டயும் போக முடியாது என வருத்தத்தில் ராமமூர்த்தி போடும் மாத்திரைகளை இவர் போட்டுக் கொள்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து பயம் வந்ததால் இதனைப் பற்றி ராமமூர்த்தியிடம் கூற பிறகு அனைவரும் இனியாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர் ராமமூர்த்தி பாக்யாவை போன் செய்து வர சொல்ல பிறகு இவர்களும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இவ்வாறு பதட்டத்தில் இருக்கும் நேரத்தில் இனியாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர் கூறுகின்றனர்.
கண் முழித்தவுடன் கோபி நீங்க எல்லாம் போங்க நான் இனியாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு போறேன் எனக் கூற அதற்கு பாக்கியா இதற்கு மேல் இனியா அங்கு வரமாட்டா என் கூட தான் இருப்பா என சண்டை போடுகிறார் எனவே இனியாவிடம் பாக்கியா என்கூட வாமா எனக் கேட்க அதற்கு கோபி என் கூட வாமா என கண்கலங்குகிறார் எனவே இனியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை வைத்து இனிவரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது. இவ்வாறு இனியா கோபி பாக்கியாவின் வீட்டிற்கு வர சொல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.