விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருத்து வரும் நிலையில் தற்போது அதிரடியான எபிசோடுகள் அரங்கேறி உள்ளது. அதாவது கோபி குடித்துவிட்டு கார் எது என தெரியாமல் தள்ளாடி வந்ததால் செழியன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறான்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபியை இந்த வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என ஈஸ்வரி கூற அதற்கு பாக்யா அப்பனா நான் என்ன பண்ணனும் சொல்லுங்க அத்தை நான் வீட்டை விட்டு போகட்டா அவருக்கும் எனக்குமான உறவு முடிந்து விட்டதாக கூறி சண்டை போடுகிறார்.
இதற்கு எழிலும் ஈஸ்வரியிடம் சண்டை போட ஆனால் ஈஸ்வரி இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அனைவரும் ஒரே வீட்டில் தான் இருக்க வேண்டும் என கூறுகிறார். கடைசியாக கோபி இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என கூற உடனே ராமமூர்த்தி அவன் எழுந்தவுடன் பொண்டாட்டியை தேடிக்கிட்டு ஓடிடுவா அவனுக்காக எதுக்கு சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க என்ன கத்துகிறார்.
இவ்வாறு காலையில் கோபி கண் முழித்த உடன் நாம எப்படி இங்கு வந்தோம் என நினைத்துக் கொண்டிருக்க உடனே போனை எடுத்துப் பார்க்கிறார் 108 முறை மிஸ்டுகால் விட்டிருப்பதையும் மெசேஜையும் பார்த்து அதிர்ச்சடைகிறார். இனியா கோபியின் பக்கத்தில் அமர்ந்து ஏன் இப்படி டெய்லியும் குடிக்கிறீர்கள் எனக் கூறி அழுகிறார்.
கீழே வந்தவுடன் கோபி வீட்டிற்கு போவதாக கூறுகிறார் உடனே ஈஸ்வரி நீ பண்றது ரொம்ப மரியாதையா இருக்கு எனக்கு கூற இதற்கு மேல் இப்படி செய்ய மாட்டேன் என கோபி சொல்கிறார். பிறகு நீ இதற்கு மேல் அங்கு போகக்கூடாது இங்க தான் இருக்க வேண்டும் என கூற கோபி, பாக்கியா என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.