வீட்டை விட்டு கிளம்புகிறேன் எனக்கூறி ஈஸ்வரி, ராமமூர்த்தி தலையில் இடியை இறக்கும் பாக்யா.! பரபரப்பாகும் பாக்கியலட்சுமி எபிசோட்…

baakiya-lakshmi-34
baakiya-lakshmi-34

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் தொடர்ந்து பல ஏராளமான திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கோபி நாள்தோறும் குடித்துவிட்டு வரும் நிலையில் ராதிகா குடிக்க கூடாது என சொல்லியும் தற்போதும் குடித்துவிட்டு பாக்கியா வீட்டில் தங்கி இருக்கிறார்.

கோபி பாக்கியா வீட்டில் இருக்கிறார் என்பது தெரியாமல் ராதிகா கோபி இதுவரையிலும் வீட்டிற்கு வரவில்லை என போன் செய்து பார்க்கிறார் ஆனால் கோபி ஃபோனை எடுக்கவில்லை எனவே ராதிகா தூங்காமல் இருப்பதை பார்த்த அவருடைய அம்மா ஏன் இதுவரையிலும் தூங்காமல் இருக்கிற எனக் கேட்க என்னுடைய வாழ்க்கை ஏமா இப்படி இருக்குது என கூறி புலம்புகிறார்.

இந்நிலையில் கோபி இதுவரையிலும் வரவில்லையே என ராதிகா பதட்டத்தில் இருக்கும் நிலையில் காலையில் வெளியில் வந்து பார்க்க அப்பொழுது கோபியின் கார் பாக்யாவின் வீட்டிற்கு வெளியில் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் எனவே வீட்டிற்குள் சென்ற ராதிகா என்னுடைய வாழ்க்கை நாசமா போய்விட்டதாக கூறி புலம்புகிறார்.

நான் ஏமாந்துட்டேன் அம்மா எனக்கூறி அழ பிறகு கோபியின் கார் பாக்யாவின் வீட்டிற்கு முன்பு நிற்கிறது எனவும் அவருடைய அம்மா தான் முக்கியம் என அவர் போய்விட்டதாக கூற அதற்கு ராதிகாவின் அம்மா இப்படியெல்லாம் அவரை விட முடியாது இதற்கெல்லாம் கவலைப்படாத இதை சரி செய்துவிட்டு தான் நான் செல்வதாக கூறுகிறார்.

இவ்வாறு தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் ராதிகா இருந்து வரும் நிலையில் மறுபுறம் எழில் கோபி இன்னமும் இந்த வீட்டில் ஏன் இருக்கிறார் என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி இது கோபியின் வீடு எனக் கூற பிறகு ராமமூர்த்தி தற்போது கோபி வீட்டிற்கு வந்து விட்டான் என நீ நினைக்காத நாங்கள் எப்பொழுதும் உன்னுடைய பக்கம் தான் என பாக்யாவிடம் கூற அவரை சமாதானப்படுத்துகிறார்.

பிறகு ஈஸ்வரி இதற்கு மேல் கோபி இங்க தான் இருப்பான் எனக் கூற செழியன்  அப்பனா அம்மா என்ன பண்ணுவாங்க என கேட்க அதற்கு பாக்யா நான் வீட்டை விட்டு போகட்டுமா இல்ல நான் இப்ப என்ன பண்ணனும் அத்தை என்ன கேட்க அதற்கு ஈஸ்வரி அமைதியாக இருக்க உடனே பாக்கியா நான் வீட்டை விட்டு போவதாக கூறுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.