கோபி பாக்கியா வீட்டில் தங்கி இருப்பது தெரிந்து ராதிகா எடுத்த அதிரடி முடிவு.! அதிர்ச்சியில் ஈஸ்வரி.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

அதாவது கோபி குடித்துவிட்டு கார் எது என்று தெரியாமல் தள்ளாடி வந்ததால் அதனை பார்த்த செழியன் அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது ராதிகாவின் வீட்டில் மட்டும் என்னை விட்டு விடாதே என கூறி கெஞ்ச வேறு வழி இல்லாமல் செழியன் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார் அங்கு கோபி குடித்து விட்டு இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு கோபியை இதற்கு மேல் ராதிகாவின் வீட்டிற்கு விடக்கூடாது அவ இந்த அளவுக்கு கொடுமை செய்வதனால் தான் இவன் குடிக்கிறான் என கூற ஈஸ்வரி கோபியை அழைத்துக் கொண்டு ரூமில் படுக்க வைக்கிறார். இந்நிலையில் காலையில் எழுந்தவுடன் கோபி தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக கூறுகிறார்.

அதற்கு ஈஸ்வரி இதற்கு மேல் அங்கு போகக்கூடாது இங்கேயே இரு என கூற அதற்கு கோபி ராதிகா அந்த வீட்டில் தான் இருக்குறா நான் அங்க போவது தான் சரி என கூறிவிட்டு கிளம்புகிறார். அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா உன்னுடைய உரிமையை நீ விட்டுக் கொடுக்கக் கூடாது நீயும் அந்த வீட்டிற்கு கிளம்பி எனக் கூற ராதிகா தன்னுடைய டிரஸ்களை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

ராதிகா பாக்யாவின் வீட்டிற்கு வர இதனை பார்த்த கோபி, பாக்கியா என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு கோபி நீ போ ராதிகா நான் வரேன் என கூற நீங்க இனிமேல் இங்கதான் இருக்க போறீங்கனா உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்ட நானும் இங்க தான் இருக்கணும் என கூற அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.