அந்த பூதம் வீட்டில் மட்டும் என்னை விட்டு விடாத.. செழியனிடம் காலில் விழாத குறையாக கெஞ்சும் கோபி.! மகனின் கதறலால் ஈஸ்வரி எடுத்த விபரீத முடிவு..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது கோபி ராதிகாவை பிரிந்து மீண்டும் தங்களுடன் வாழ வேண்டும் என ஈஸ்வரி ஆசைப்படுகிறார்.

அதாவது இன்றைய எபிசோடில் கோபி குடித்துவிட்டு கார் எது என்று தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் இதனை பார்த்து செழியன் வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பொழுது செழியனிடம் தான் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும் இனியா தன்னை விட்டு விட்டு சென்றதாகவும் கூறி புலம்புகிறார்.

பிறகு ராதிகாவின் வீட்டில் விடுவதற்காக காரை நிறுத்த அதற்கு கோபி இந்த பூதம் வீட்டில் மட்டும் என விட்டுடாத என கெஞ்சுகிறார். எனவே செழியன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நிலையில் அங்கு கோபி குடித்துவிட்டு வந்திருப்பதை பார்த்த ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு கோபி ராமமூர்த்தியை பார்த்து உங்களுக்கு தான் என்ன பிடிக்காதுல அப்புறம் எப்படி என் வீட்டுக்கு வந்தீங்க என்ன கேட்கிறார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்க உடனே எழில் எதற்கு அவரை இங்கு அழைச்சிட்டு வந்தீங்க அவரை அங்கேயே கொண்டுட்டு போய் விட வேண்டியது தானே என கூறி சண்டை போடுவதற்கு ஈஸ்வரி உன்னுடைய அம்மா என்றால் உன்னை இப்படி தான் விட்டுட்டு போவாளா எனக் கூறுகிறார்.

இதனை எடுத்து மறுபுறம் ராதிகா கோபி வரவில்லை என காத்துக் கொண்டிருக்கும் நிலையில் போன் செய்து பார்க்கிறார். அப்பொழுது ஃபோன் எடுக்கவில்லை எனவே ராதிகாவின் அம்மா நீ இப்படி கஷ்டப்படுவான்னு தெரிஞ்சிருந்தா உன்னை மீண்டும் கல்யாணம் பண்ணிக்க சொல்லிருக்க மாட்டேன் எப்பவும் இப்படித்தான் குடிச்சிட்டு வருவாரா என கேட்கிறார் இல்லை இப்ப கொஞ்ச நாளா தான் இப்படி குடிச்சிட்டு வருவதாக ராதிகா கூறி புலம்புகிறார்.

பிறகு ஈஸ்வரி கோபி அவருடைய ரூமுக்கு அழைத்துச் சென்று படுக்க வைக்கிறார். இவன் இந்த அளவுக்கு குடிக்கிறானா அவ ஏதாச்சும் பிரச்சனை பண்ணி இருக்கணும் என கூற பிறகு இனியாவிடம் அங்கு நீ இருக்கும் பொழுது ஏதாச்சும் சண்டை நடக்குமா என கேட்கிறார். அதற்கு செழியன் ஆமாம் பாட்டி நான் வர வழி எல்லாம் அந்த வீட்ல மட்டும் என்ன விட்டுடாத என கெஞ்சுனாரு என சொல்ல அதற்கு இனியாவும் சண்டை நடக்கும் எனச் சொல்கிறார். இதனால் இதற்கு மேல் அந்த வீட்டிற்கு இவனை போக விடக்கூடாது இவனுக்கு என்ன தலை எழுத்தா? என கூற இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.