விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து எதிர்பாராத திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் கோபி ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு படாத பாடுபட்டு வரும் நிலையில் ராதிகா கோபியை குடிக்கக்கூடாது எனக் கூறியும் டெய்லி கோபி ஃபுல்லாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வம்பு வளத்துகிறார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபி ஃபுல்லாக குடித்துவிட்டு ரெஸ்டாரண்டில் கார் தெரியாமல் அலைமோத இதனைப் பார்த்து செழியன் பிறகு தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார். அங்கு வந்தவுடன் ஈஸ்வரி அதிர்ச்சடைய பிறகு கோபியை அழைத்துக்கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு ராமமூர்த்தி செல்கிறார்.
அங்கு சென்றவுடன் ராதிகா கோபி குடித்து இருப்பதை பார்த்து அதிர்ச்சடைகிறார் உடனே கோபி புருஷன் வெளியில இருந்து வந்திருக்கான் இந்த சார்ல தண்ணி வைக்கணும்னு உனக்கு தெரியாதா சார்ல தண்ணி வைக்கிறதற்கு மனசு இல்லல்ல இடியட் என சார்யை தூக்கி போடுகிறார்.
இதுதான் நீ என் மேல வச்சிருக்கற அன்பா எனக் கூற உடனே கோபியை சும்மா இருடா என ராமமூர்த்தி தள்ளி விடுகிறார். என்னடா ஆச்சு உனக்கு? ஏன்டா எப்ப பாத்தாலும் குடிச்சிட்டு வந்து இப்படி கஷ்டப்படுத்துற என கேட்க அதற்கு கோபி மனசுக்குள்ள கஷ்டமா இருக்குப்பா எதை நினைச்சாலும் கஷ்டமா இருக்கு அவ என்னன்னா அப்படி இருக்கா இவ என்னன்னா எப்ப பார்த்தாலும் கத்திக்கிட்டு ஒரு நிமிஷம் நிம்மதியா வாழ விட மாட்டங்குறா எனக் கூறுகிறார்.
உடனே ராதிகா நான் என்ன பண்ணுன இப்படி குடிச்சிட்டு வந்தா என்னால தானே நீங்க குடிச்சிட்டு வரீங்கன்னு எல்லாரும் பேசுவாங்க எனக் கத்த அதற்கு ராமமூர்த்தி நீ கத்துறது எல்லாம் வேஸ்ட் எனக் கூறுகிறார். பிறகு உடனே கோபி நான் அப்படி தான் குடிப்பேன் எனக்கு உன்ன புடிக்கல.. உன்ன வெறுக்கிறேன் எனவும் மேலும் மனசுல இருந்து சொல்றேன் பாக்யா தான் பெஸ்ட் நீ டோட்டல் வேஸ்ட் என ராதிகாவை அசிங்கப்படுத்துகிறார்.