விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை ஈஸ்வரி வீட்டிற்கு அழைத்ததை ஒட்டு கெட்ட நிலையில் இதனை பற்றி தன்னுடைய அம்மாவிடம் கூறுகிறார்.
எனவே தற்பொழுது ராதிகாவின் அம்மா வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அங்கு ராதிகா தனது அம்மாவை பார்த்து அழுகிறார். மேலும் கோபியிடம் அவர் ராதிகா ராஜேஷ் கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டா அதனாலதான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா நீங்க யாரு உங்க பொண்டாட்டியாரு என்ன தெரிஞ்சதும் இந்த கல்யாண வேண்டாம் என்று சொன்னா.
ஆனா நான் தான் கேட்காம கல்யாணம் செஞ்சு வச்ச என கோபியிடம் பேசிக் கொண்டிருக்க பிறகு ஈஸ்வரி கோபியிடம் சொன்னதை ராதிகா கூறுகிறார். அப்பொழுது ராதிகாவின் அம்மா நீயும் அந்த வீட்டுக்கு கோபியோட போய்விடு என கூற இதனால் கோபி, ராதிகா அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு கோபி ஆபீஸ் இருக்கு செல்கிறார் இந்த நேரத்தில் செழியன் மீட்டிங்கிற்காக ரெஸ்டாரன்ட் சென்றிருக்கும் நிலையில் பெண் ஆஃபீசர் வருகிறார் இருவரும் அங்கு பேசிக் கொண்டிருக்க பிறகு வேலையை முடித்துவிட்டு கிளம்புகின்றனர்.
இந்நிலையில் செழியன் கிளம்பும் நேரத்தில் கோபி புல்லாக குடித்துவிட்டு கார் எது என்று தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் வந்து கோபியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். அங்கு நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு படாத பாடு படுவதாகவும் என் பொண்ணு இனியா என்னை விட்டு போய்விட்டதாகவும் கூறி புலம்புகிறார்.
இவ்வாறு மீண்டும் மீண்டும் ராதிகா கூறியும் கோபி குடித்து வரும் நிலையில் கண்டிப்பாக ராதிகாவை பிரிந்து பாக்கியா குடும்பத்துடன் இணைய வாய்ப்பிருக்கிறது. அப்படி இல்லை என்றால் ராதிகா மயூ இருவரையும் அழைத்துக் கொண்டு பாக்யா குடும்பத்துடன் ஒன்றாக வாழ இருக்கிறார்கள்.