விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் கோபி என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய குடும்பத்திற்கு இடையே மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டு வருகிறார். அதாவது கோபி தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் ராதிகா செம கடுப்பிலிருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் கோபி நடு ரோட்டில் குடித்துவிட்டு விழுந்து கிடக்க அவரை பாக்யா, எழில் இருவரும் வீட்டில் அழைத்து வருகிறார்கள் இதனை பார்த்தவுடன் ராதிகா அதிர்ச்சடைகிறார். பிறகு காலையில் எழுந்தவுடன் மயூவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு போவதாக கூற பிறகு கோபி நடு ரோட்டில் ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.
எனவே பிறகு ராதிகாவின் வீட்டிற்கு வந்தவுடன் இன்றைய எபிசோடில் கோபி காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு சாமி கும்பிடுகிறார். மேலும் ராதிகாவிடம் இதற்கு மேல் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்ய இந்த நேரத்தில் ஈஸ்வரி கோபிக்கு போன் செய்து கோவிலுக்கு வர சொல்கிறார். பிறகு கோபி கிளம்பி விட ராதிகா தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து கோபியை தெரியாமல் கல்யாணம் செஞ்சி தப்பு பண்ணிட்டேன் எனக் கூறி கதறுகிறார்.
அவரு குடிக்கிறாரு ஏன்தா என்ன திருமணம் செஞ்சுக்கிட்டாருனு எனக்கு தெரியல என கூறிவிட்டு பிறகு கோபி குடித்துவிட்டு ரோட்டில் கிடந்தது அவரை பாக்கியா, எழில் அழைத்து வந்தது என அனைத்தையும் கூற உன்னை யாரு கோபிய தனியா விட சொன்னது அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு போய் கேளு என கூறியவுடன் ராதிகா கோவிலுக்கு வருகிறார்.
பிறகு ஈஸ்வரி ஏன்டா இப்படி இருக்கிற நீ என்னுடைய பையன் நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைப்பேன் எனக்கூறி அழ உடனே கோபி ஈஸ்வரியை கட்டிப்பிடித்து சாரி அம்மா இதற்கு மேல் குடிக்க மாட்டேன் என சொல்கிறார். பிறகு நீ நம்ம வீட்டுக்கு வந்து விடு என கூற உடனே கோபி அதிர்ச்சியடைகிறார். மேலும் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ராதிகா ஓட்டு கேட்கிறார்.
ஒரு கட்டத்தில் கோபி அமைதியாக இருந்ததால் ஈஸ்வரி உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கிறேன் நீ கண்டிப்பா வீட்டுக்கு வந்து தான் ஆக வேண்டும் நான் எல்லார்கிட்டயும் பேசுறேன் இதற்கு மேல்லாவது உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் எப்பொழுது வர என கோபிக்கு ஆர்டர் போட்டுவிட்டு கிளம்புகிறார் இதையெல்லாம் ஓட்டு கேட்கும் ராதிகாவிற்கு அதிர்ச்சியாக உள்ளது.
இவ்வாறு கோபி ராதிகாவை விட்டு பிரிந்து மீண்டும் தன்னுடைய குடும்பத்தினருடன் சேருவாரா? இல்லை ராதிகா உடனே வாழ்வாரா? என்பதனை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் கோபி குழப்பத்தில் இருந்து வருகிறார்.