பாக்கியா தான் பெஸ்ட் நீ டோட்டல் வேஸ்ட் என ஆதங்கத்தை கொட்டி தீர்த்த கோபி.! நீ அவன் கூட வண்டில போக கூடாது.. பரபரப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்ந்து இந்த சீரியலில் பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் சமீப காலங்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கிய உள்ளது மேலும் தற்பொழுது மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டு அதில் கோபி வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.

அதாவது பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் செல்லும் நிலையில் அங்கு இவருக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். அந்த வகையில் பாக்கியா பழனிசாமி இருவரும் மிகவும் ஜாலியாக பழகி வரும் நிலையில் இதனை பார்த்த கோபிக்கு கடுப்பாகி உள்ளது. கேண்டின் திறப்பு விழாவில் பழனிசாமி பாக்யாவிடம் வழுஞ்சதையும் பாக்கியா அதற்கு வெட்கப்பட்டதையும் பார்த்த கோபிக்கு கோபம் ஏற்பட்டது.

இதனை அடுத்து இன்றைய எபிசோடில் பழனிசாமி, பாக்கியா மற்றும் மேலும் ஒரு பெண் தோழி மூவரும் இணைந்து சூப்பர் மார்க்கெட் செல்கின்றனர். அங்கு கோபியின் நண்பர் பழனிசாமியிடம் பாக்கியா சிரித்து பேசுவதை போட்டோ எடுத்து காமிக்க இதனால் கோபப்பட்ட கோபி பிறகு வாட்ச்மேன்னிடம் கேட்க அப்பொழுதுதான் பாக்யா பழனிசாமி உடன் வண்டியில் போனது தெரிய வருகிறது.

எனவே இதனால் கோபமடைந்த கோபி இரவில் புல்லாக குடித்துவிட்டு வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராமமூர்த்தி கதவை திறக்க அவரின் மேல் கோபி விழுகிறார் அப்பொழுது மறுபடியும் குடிச்சிட்டு வந்தீங்களா என கேட்க அதற்கு ஆமா குடிச்சிட்டு வந்திருக்கேன் என கூற ராமமூர்த்தி எதுக்கு குடிச்ச என கேட்கிறார்.

அப்பொழுது கோபி பாக்கியா என்னன்னா அப்படி இருக்கிறா இவ என்னனா என்ன டெய்லியும் டார்ச்சர் பண்றா இனிமே பெரிய பாட்டில் குடிப்பேன் முன்னாடி எல்லாம் சிரிச்சு சிரிச்சு பேசுவ இப்பல்லாம் அன்பே கிடையாது என் உலகமே என் குழந்தைகள் தான் எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் எனக் அவங்களுக்காக மட்டும் தான் வாழுறேன் என கூறுகிறார்.

பாக்கியா தான் பெஸ்ட் நீ எப்ப பார்த்தாலும் திட்டிட்டு இருக்க குறை சொல்லிட்டு இருக்க டோட்டல் வேஸ்ட் எனக்‌ கூற அதற்கு ராமமூர்த்தி கடைசியில் நீ நடு ரோட்டில் தான் நிக்க போற என கூறுகிறார். பிறகு காலையில் எழுந்தவுடன் தலைவலியாக இருப்பதாக கோபி கூற அதற்கு ராதிகா பாக்யா தான் பெஸ்ட்டா எனக் கேட்க அப்படியெல்லாம் கிடையாது என கோபி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

அதன் பிறகு கோபி பாக்கியாவை ரோட்டில் சந்திக்க அந்த நேரத்தில் நீ என்ன அவன் கூட வண்டியில போயிட்டு இருக்க உன் இஷ்டத்துக்கு பண்ணுவியா என கேட்க நான் அப்படி தான் பண்ணுவேன் வெயிட் பண்ணி பாருங்க என திமிராக கூறி விட்டு செல்கிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment