50 வயதில் ரொமான்ஸ் செய்ய முயற்சித்த கோபிக்கு என்ட் கார்டு போட்ட மையூ.! கதறி அழும் ராதிகா..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது பல சுவாரசியமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் பாக்கிய லட்சுமி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

மேலும் செழியன் இதற்கு மேல் நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என ஆதரவாக இருந்து வரும் நிலையில் பாக்கியா குடும்பத்தினர்கள் முன்னால் ராதிகாவும் அவமானப்பட்டதால் கோபியின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார். எனவே இன்று முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ராதிகாவின் மகள் அம்மாவுடன் நான் தூங்குவேன் என அடம்பிடிக்கிறார்.

ஆனால் அதற்கு பாட்டி என்னுடன் தூங்கி என வற்புறுத்தி தன்னுடன் தூங்க வைத்துக் கொள்கிறார் மேலும் ராதிகா கோபி இருவரும் ரூமுக்குள் சென்று ரொமான்ஸ் செய்யுது வரும் நிலையில் 50 வயசில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இதெல்லாம் உனக்கு தேவையா கோபி என ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகிறார்கள். மேலும் மண்டபத்தில் நடந்ததை நினைத்து அழுகிறார் ஒருவழியாக ராதிகாவை கோபி சமாதான படுத்துகிறார்.

பிறகு மையூ அதற்குள் அம்மாவுடன் தான் நான் படுப்பேன் என அடம்பிடிப்பதால் ராதிகா தன்னுடன் படுக்க வைத்துக் கொள்கிறார் ஆனால் இதற்கு கோபி உடன்பாடு இல்லாதது போல் இருந்து வரும் நிலையில் பேர பிள்ளைகள் எடுக்கும் வயதில் இது ஒன்றுதான் குறையா என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது கோபி ராதிகா இருவரையும் கொடைக்கானல் அனுப்பி வைக்க ராதிகாவின் அம்மா அண்ணன் ஏற்பாடு செய்துள்ளனர்.

இங்கு மையுடன் பிரச்சனை இருக்கிறது எனவே கொடைக்கானலில் சந்தோஷமாக இருக்கலாம் என கோபி நினைக்க ஆனால் அங்குதான் மிகப்பெரிய தலைவலி இருக்கிறது ஏனென்றால் பாக்யா குடும்பம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் கொடைக்கானலில் சுற்றி வருகிறார்கள். இதனால் கோபி பல பிரச்சனைகளை சந்திக்க உள்ளார்.