விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியா தன்னுடைய கேண்டினை திறக்க இருக்கும் நிலையில் அதற்காக திறப்பு விழா நடத்துகிறார்.
எனவே இந்நிகழ்ச்சிருக்கு அனைவரும் வரவேண்டும் என அழைத்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் காலையில் எழுந்தவுடன் அனைவரும் கேண்டின் திறப்பு விழாவிற்கு செல்கின்றனர். அப்பொழுது ஈஸ்வரி மட்டும் கிளம்பாத காரணத்தினால் உங்களுடைய பெயரில் இருக்கும் கேண்டினுக்கு நீங்க வராமல் இருந்தால் எப்படி வாங்க அத்த என கூற அதற்கு ஈஸ்வரி எல்லாம் உன்னுடைய இஷ்டத்துக்கு தான் பண்ற என்னால் வர முடியாது என கூறுகிறார்.
பிறகு பாக்யா ஈஸ்வரியின் காலில் விழுந்து அழுதம்கூட அவர் வர முடியாது என கூறி விடுகிறார் எனவே ராமமூர்த்தி பாக்யாவை சமாதானப்படுத்தி திறப்பு விழாவிற்கு அழைத்துச் செல்கிறார். மறுபுறம் இனியாவும் கேண்டின் திறப்பு விழாவிற்கு செல்வதாக கூறி கிளம்பி இருக்கும் நிலையில் ராதிகா யாரும் அங்கு செல்ல வேண்டாம் என சொல்லிவிட கோபி இனியவை அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு செல்கிறார்.
அங்கு சென்று நீ அப்பாக்கூடையே இரு எங்கேயும் போக வேண்டாம் என சொல்ல அதற்கு இனியா உங்க கூட இருந்தா எனக்கு சந்தோஷமாகவே இல்லை நானும் அண்ணன்கள் கூட இருக்க வேண்டுமென நினைப்பல்ல நான் இனிமேல் உங்க கூட இல்ல வீட்டுக்கு போகிறேன் என சொல்ல பிறகு உனக்கு இப்ப என்ன செய்ய வேண்டும் என கோபி கேட்கிறார். அப்பொழுது திறப்பு விழாவிற்கு போக வேண்டும் என இனியா கூற கோபி நீதான் இன்னும் பைத்தியக்காரனாவே இருக்கிற என மனதில் நினைத்துக் கொண்டு இனியாவை அழைத்துக் கொண்டு திறப்பு விழாவிற்கு செல்கிறார்.
மேலும் ராதிகாவும் இந்த திறப்பு விழாவிற்கு போகக்கூடாது என நினைக்க ஆனால் ஆபிசர் போன் செய்து எனது திறப்பு விழாவிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என கூற ராதிகாவும் செல்கிறார் இவ்வாறு வேறு வழி இல்லாமல் குடும்பமே ஈஸ்வரி கேன்டின் திறப்பு விழாவிற்கு செல்கிறார்கள்.