காதல் வலையை வீசிய எழில் ஒப்புக்கொண்டாரா அமிர்தா.! இன்றைய பரபரப்பான எபிசொட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி சீரியளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது கோபி மற்றும் ராதிகா எப்படி திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் மற்றும் கோபி எப்படி எல்லாம் தனது குடும்பத்தை மாற்றுகிறார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் நிலையில் கொஞ்சம் வித்யசமாக கதையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தற்பொழுது எழிலிடம் அமிர்தா தனது காதலை ஒப்புக் கொள்ளவுள்ளார்.

அமிர்தா கணவனை இழந்த பெண்ணாக, ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இவருடைய கணவர் திருமணமான சில நாட்களிலேயே விபத்தில் சிக்கி உயிர் இழந்ததால் தனது மாமனார் மாமியாருடன் சென்னைக்கு வந்துவிட்டார் சென்னையில் வந்து கல்லூரி படித்து வந்த இவரை சந்தித்த எழிலுக்கு பார்த்தவுடன் மிகவும் பிடித்து விட்டது.

எனவே ஆரம்பத்தில் அமிர்தாவை பற்றி தெரியாமல் இருந்தாலும் சில நாட்கள் கழித்து எழில் இருக்கு அனைத்தும் தெரிய வந்தது இருந்தாலும் அமிர்தாவை அப்படியே விட்டு விட்டுப் போகாமல் அவருக்கு பக்கபலமாக இருந்து வந்தார்.

அமிர்தாவின் மாமனார் மாமியார் இருக்கும் எழிலை மிகவும் பிடித்துவிட்டது.பிறகு எழில் தனது வீட்டில் தனது தோழியாக குடும்பத்திலுள்ளவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அமிர்தாவை பாக்கியாவிற்க்கு மிகவும் பிடித்துவிட்டது.

இப்படி எழில் தனது காதலை அமித்ஷாவிடம் கூறியும் அமிர்தா எந்த பதிலும் கூறாமல் இருந்து வந்தார்.ஆனால் தற்பொழுது எழிலிடம் அமிர்தா காதலிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் அமிர்தாவே எழிலிடம் தனது வாயால் காதலிப்பதாக கூறிவுள்ளார்.

Leave a Comment