பிடிக்காத பாக்கியாவுடன் ஏன் மூன்று பிள்ளைகளை பெற்றுக்கொண்ட.? ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த கோபி.

0
baakiya-lakshmi-serial-23
baakiya-lakshmi-serial-23

விஜய் டிவியில் மிகவும் பிரமாண்டமாக சுவாரசியத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  மேலும் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சுவாரசியமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது இந்த சீரியலில் கோபி என்ற கேரக்டர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலிக்கிறார். பிறகு தனது தந்தையின் வற்புறுத்தலால் படிக்காத மற்றும் பிடிக்காத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் செய்து கொண்டு செழியன், எழில், இனியா என்ற மூன்று குழந்தைகள் பிறக்கிறது. அதன் கோபியின் மூத்த மகனான செழியனுக்கு திருமணம் ஆகிவிட்டது.இப்படிப்பட்ட நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது கல்லூரி காதலி ராதிகாவை பார்க்கிறான்.

மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷை ரசிகர்கள் தொடர்ந்து திட்டி வருவதோடு மட்டுமல்லாமல் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது சமூக வலைதளத்தில் வந்த நெகட்டிவ் கமெண்டுகளில் சிலவற்றைக்கு கோபி பதில் அளித்துள்ளார்.

அதாவது பாக்யாவை பிடிக்காத நீங்கள் எப்படி மூன்று குழந்தைகளை பெற்றீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.  அதற்கு சதீஷ் கோபியாக இருந்த பதிலை கூறியுள்ளார். அதாவது எனக்கு திருமணம் ஆகும் பொழுது 23 வயது. அந்த வயதில் ஒரு ஆணுக்கு உடல் பசி என்பது அதிகமாக இருக்கும்.

அதனால் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டேன் அதன் பிறகு கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து ராதிகாவை பார்த்தவுடன் மனதில் ஆழமாக பதிந்திருந்த காதல் வெளியே வந்துள்ளது என கோபி கூறி உள்ளார். இவ்வாறு இவர் கூறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.