பாக்கியாவின் தோளில் கையை போட்டு நெருங்கி பழக முயற்சிக்கும் கோபி.. ராதிகா மட்டும் பார்த்தா என்ன ஆகும்.?

baakiyalakshmi-03
baakiyalakshmi-03

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மீண்டும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்து வருகிறார். மேலும் ராதிகாவை வெறுத்து வரும் நிலையில் எப்படியாவது அனைவரையும் பழிவாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தொடர்ந்து குடித்துவிட்டு கோபி ரோட்டில் கிடப்பதால் இதனை நினைத்து ஈஸ்வரி வருத்தமடைகிறார்.

மேலும் ராதிகா சண்டை போட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்ற நிலையில் காலையில் எழுந்தவுடன் கோபி தலைவலிப்பதாக கூறுகிறார். எனவே கோபியிடம் இப்பல்லாம் அதிகமாக குடிச்சுகிட்டு இருக்கே உன்ன நினைச்சாலே பயமா இருக்கு எனக் கூற இனியாவும் இப்படியெல்லாம் நீங்க பண்றது சுத்தமா பிடிக்கல என கூறுகிறார்.

பிறகு ஈஸ்வரி அவள விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் பழையபடி வாழலாம் எனக் கூற கரெக்டாக ராதிகா வீட்டிற்கு வருகிறார். இதனை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து அனைவரிடமும் சண்டை போடுகிறார். பிறகு பாக்கியா கோபிக்காக காபி ஒன்றை போட்டு தருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராதிகா வீட்டில் ஆள் இல்லை.

எனவே இந்த நேரத்தில் பாக்யா, செழியன், அமிர்தா, ஜெனி, எழில் என அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு பேசி சிரித்து கொண்டிருக்கிறார். சிரிப்பு சத்தம் வெளியில் வரையிலும் கேட்க பிறகு கோபி கிச்சனுக்கு சென்று என்ன பேசுறீங்க சொன்னா நானும் சிரிப்பதில்லை என கூறுகிறார்.

இந்த நேரத்தில் எழில் அவங்க வந்துட்டாங்க எனக் கூற யார் என கோபி கேட்கிறார் அதான் அந்த ராதிகா என்று சொன்னவுடன் ஐயோ நான் இல்லை நான் சும்மாதான் வந்தேன் நான் காபி குடிக்க வரல எனக்கு வேண்டாம் என பதட்டமடைகிறார் இதனை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர் அதன் பிறகு தான் கோபியை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது அவருக்கு புரிய வருகிறது.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் பாக்யாவாக நடித்து வரும் சுசித்ரா ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபியாக நடித்த வரும் சதீஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எனவே இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராதிகா பார்த்தால் என்ன ஆகும் என கிண்டல் செய்து வருகிறார்கள்.

susithra
susithra