மண்ட மேல இருக்குற கொண்டையை மறந்துட்டிங்களே.. பாக்கியலட்சுமி சீரியலை பங்கமாகக் கலாய்க்கும் ரசிகர்கள்.!

baakiyalakshmi
baakiyalakshmi

பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது தான் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் எழில் ஆசைப்பட்டது போலவே பாக்கியா அமிர்தாவுடன் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனை அடுத்து கோபிக்கு ஆறு மாசத்திற்குள் 20 லட்சம் ரூபாய் கடனை அடைத்து விடுவதாக கூறி இருக்கும் நிலையில் அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கி வருகிறார்.

இவ்வாறு அமிர்தா எழிலுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் இது ஈஸ்வரி பாட்டிக்கு சுத்தமாக பிரிக்கவில்லை எனவே எழில், அமர்ந்தா பக்கத்திலேயே வரக்கூடாது என கண்டிஷன் போட்டு வருகிறார். இப்படி ஒரு பக்கம் பிரச்சனை போய்க்கொண்டிருக்க அமிர்தாவின் குழந்தை ஈஸ்வரியிடம் அடிக்கடி சென்று முத்தம் கொடுத்து சேட்டைகளை செய்து வருகிறது இதனால் ஈஸ்வரிக்கு அந்த குழந்தையை மிகவும் பிடித்து விடுகிறது.

மேலும் அம்மா பேச்சைக் கேட்டு கோபி யாரையும் வீட்டை விட்டு காலி பண்ண சொல்லாத நிலையில் ராமமூர்த்தி தன்னுடைய மொத்த சொத்துக்களையும் கோபிக்காக எழுதி வைத்துள்ளார். ஆனால் மேலும் 20 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறிய நிலையில் பாக்யா ஆறு மாதத்திற்குள் தருவதாக கூறியிருக்கிறார்.

ராதிகாவின் சூழ்ச்சியினால் பறிபோன கேட்டரிங் வாய்ப்பு தற்பொழுது மீண்டும் பாக்கியாவிற்கு கிடைத்திருக்கும் நிலையில் அதனை தரவிடாமல் செய்ய ராதிகா பால திட்டங்களை செய்தும் கடைசியாக பாக்கியா கேட்டரிங் டென்டரை கைப்பற்றி விடுகிறார். இங்கிலீஷ் எல்லாம் பேசி அசிங்கப்படுத்திய ராதிகா நினைத்த நிலையில் பாக்கியா ராதிகாவை அசிங்கப்படுத்தி விட்டு வந்துள்ளார்.

எனவே இங்கிலீஷ் கோச்சிங் கிளாஸ் செல்ல பாக்கியா முடிவு செய்துள்ளார் அதற்கு எழிலும் துணையாக இருக்கிறார். இவ்வாறு மகன் எழிலிடம் போனில் பேசிக் கொண்டே ஸ்கூட்டியை எடுக்க அந்த நேரத்தில் ரஞ்சித் வர பிறகு இவர்களின் வண்டி மோதிக் கொள்கிறது. இவ்வாறு பழனிசாமி என்ற கதாபாத்திரத்தில் ரஞ்சித் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் அதேபோல் அவருடைய மனைவி பிரியா ராமனும் சீப் கெஸ்ட்டாக வந்துள்ளார்.

அவர்தான் பாக்யாவின் ஈஸ்வரி கேண்டினை திறந்து வைத்துள்ளார். இவ்வாறு பாக்யாவுக்கு புதிய ஜோடியாக ரஞ்சித் இருப்பார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வந்த நிலையில் இதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என பாக்கியலட்சுமி சீரியலை கலாய்த்து வருகின்றனர்.