நாலாபுறமும் அடி வாங்கும் கோபி.. எது நடக்கக் கூடாதோ அது நடந்துடுச்சி.! ஷூட்டிங் ஸ்பாட்டில் சதீஷ் வெளியிட்ட வீடியோ இதோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த சீரியல் ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலின் மூலம் புதுமுக பிரபலங்கள் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் தற்போது இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவ்வாறு இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் நிலையில் அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது கோபி கேரக்டர் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் டிஆர்பியிம் முன்னணி வகித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த சீரியலில் கோபி அதிகம் குடித்துவிட்டு வருவதனால் அவருடைய அம்மா ஈஸ்வரி தங்களுடன் கோபி இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். ஆனால் கோபி ராதிகாவுடன் இருப்பதுதான் சரி என தனது அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராதிகா இவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு வருகிறார்.

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதாவது ராதிகாவின் அம்மா உன்னுடைய உரிமையை விட்டு தரக்கூடாது என உசுப்பேற்றிய நிலையில் ராதிகா தனது பையுடன் பாக்யாவின் வீட்டிற்கு வர இனிமேல் நான் இங்கேதான் இருக்கப் போகிறேன் என கூறுகிறார் இது குறித்த ப்ரோமோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

இப்படிப்பட்ட நிலையில் கோபி கேரக்ட்டரில் நடித்து வரும் சதீஷ் சீரியல் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாக்யா வீட்டில் அவரது அறையில் உள்ளேன் இனிமேல் இப்படிதான் கதை நகரப் போகிறது எது நடக்க கூடாதோ அது நடக்கப் போகிறது இன்னும் முழு பணம் கொடுக்கவில்லை என இந்த வீடியோ வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..