விஜய் டிவியில் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் தற்போது சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது தற்பொழுது பாக்கியாவின் இரண்டாவது மகன் எழிலுடைய திருமணம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு நடைபெற்று முடிந்துள்ளது.
தன் மகனுடைய விருப்பம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் எதிர்த்து பாக்கியா அமிர்தாவுடன் எழிலுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இதன் காரணமாக அனைவரும் பாக்கியா, எழில் மீது கோபத்தில் இருந்து வருகிறார்கள். கோபி வீட்டை விற்க வேண்டுமென முடிவு செய்த நிலையில் எனவே அனைவரையும் வீட்டை விட்டு வெளியே போக சொன்னார்.
இதற்கு எழிலும் சபதம் கொடுத்த நிலையில் பிறகு இவர்களால் பணம் புரட்ட முடியாமல் போனது இப்படிப்பட்ட நிலையில் ஈஸ்வரி ராமமூர்த்தி இருவரும் கோபியை சந்தித்து அந்த வீட்டை விட்டு யாரும் வெளியில் போக முடியாது என பேசி சம்பந்தம் வாங்கினர். அடுத்த நாள் வீட்டிற்கு வந்த கோபி அப்பாவுடைய சொத்துக்கள் என்னுடைய பெயரில் எழுதி வைப்பதாக கூறியுள்ளார் ஆனால் சொத்துக்கள் என்னுடைய வீட்டிற்கு பத்தாது.
கணக்குப் போட்டு பார்க்கும்பொழுது 20 லட்சம் நீங்க இன்னும் எனக்கு தர வேண்டியது இருக்கிறது எனக் கூற அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு கோபிக்கு 20 லட்சம் பணத்தை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக பாக்யா கேட்ரிங்கில் ஆர்வம் செலுத்த உள்ளார். அந்த வகையில் இவருக்கு தற்பொழுது ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பெரிய பங்க்ஷன் நடக்க இருக்கிறது அதில் இவருக்கு கேட்டரிங் செய்வதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது.

எனவே இந்த கேட்டரிங் ஆர்டரை நடத்த பாக்யாவுடன் இணைந்து அமிர்தாவும் வேலை செய்ய போகிறார் இதை வைத்துதான் இனிமேல் வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய புது மருமகள் அமிர்தாவுடன் இணைந்து பாக்யா செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பாக்கியா, அமிர்தா இருவரும் இணைந்து நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.
வீடியோவை பார்க்க எங்க கிளிக் செய்யவும்..