குக் வித் கோமாளியை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ள விஜய் டிவி.! வெளியான ப்ரோமோ..

ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சி அந்த அளவிற்கு பிரபலமான தொலைக்காட்சி அல்ல காலப்போக்கில் வளர்ந்து விஜய் தொலைக்காட்சி ஸ்டார் விஜய் என மாறியது அதன் பிறகு இந்த தொலைக்காட்சி மக்களிடையே தனக்கென தனி ஒரு இடத்தை அங்கீகரித்தது.

என்னதான் மற்ற தொலைக்காட்சிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தாலும், இந்த விஜய் தொலைக்காட்சியை மட்டும் அவ்வளவு எளிதாக கீழே தள்ள இயலவில்லை ஏனென்றால் இந்த தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் இதில் ஒளிபரப்பபடும் நாடகங்கள் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்து தன் பக்கம் ஈர்த்துக்கொண்டது.

இந்த தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வெற்றியும் பெற்றது மேலும் இந்த நிகழ்ச்சி பல நபர்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலமானவர்களாக ஆக்கியது, இதில் முக்கிய புள்ளியாக சிவகார்த்திகேயனை சொல்லலாம், இவரின் தற்போதைய நிலைமைக்கு விஜய் டிவிதான் முதன்மை காரணம் என்றால் அது மிகையாகாது.

மேலும் பல ரியாலிட்டி ஷோக்கலான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக் பாஸ், சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் போன்ற அனைத்தும் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றவையாகும்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் அனைத்து போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானவர்களாக இருப்பார்கள் ஆகையால் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் சற்று வித்தியாசமாக இருப்பதனால் இந்த நிகழ்ச்சி மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்தாக பிக் பாஸ், பிக் பாஸில் பல சீசன்களை வெளியிட்டு விஜய் டிவி தனது டிஆர்பி ரேட்டிங்கையும் உயர்த்திக் கொண்டது, ஏனென்றால் பிக் பாஸ் பார்ப்பதற்கு தமிழ்நாட்டில் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் உள்ளனர், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நபர்கள் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி புதிதாக ஒரு ரியாலிட்டி ஷோவை கொண்டுவர உள்ளது அந்த ரியாலிட்டி ஷோ கேம் ஷோ போன்ற ஒன்று, இந்த நிகழ்ச்சிக்கு அட்டகாசம் என பெயர் வைத்துள்ளனர், ஆகஸ்ட் 14 மதியம் 1:30 மணி அளவில் இந்த ஷோ வெளியாக உள்ளது. மேலும் இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து விஜய் தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட வீடியோ இதோ.

 

Leave a Comment