அச்சு அசல் அறந்தாங்கி நிஷாவை போலவே இருக்கும் அவரது மகள்.! என்னம்மா நெடுநெடுவென வளர்ந்து விட்டாங்க பார்த்தீர்களா.!

சின்னத்திரையில் ஆண் காமெடியன்கள் மிகவும் எளிதாக தங்களுடைய திறமையை வைத்து சிறிய காலத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று விடுவார்கள் அந்த வகையில் பல நடிகர்களை உதாரணத்தைக் கூறலாம். ஆனால் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒன்று. சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பட்டா போட்டு பிடித்தவர் அறந்தாங்கி நிஷா.

காமெடி என்றால் இது எங்க ஏரியா என்று கூறுமளவிற்கு தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கட்டிப்போட்டவர், இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பல்வேறு ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் அறந்தாங்கி நிஷா.

அறந்தாங்கி நிஷா ரியாஸ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார் அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4ங்கில் கலந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பங்கேற்றார்.

aranthangi nisha

பல்வேறு ஆண் காமெடியன்கள் மத்தியில் பெண் காமெடியான இவரின் காமெடிகளை மக்கள் ரசித்தார்கள் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுதுதான் இரண்டாவது குழந்தை பிறந்தது அப்போது தனது அம்மாவே தனக்கு மகளாகப் பிறந்து விட்டார் என உருக்கத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் தன்னுடைய மகளுடன் ஒரு புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் உங்கள் மகள் நெடுநெடுவென வளர்ந்து விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

aranthangi nisha

Leave a Comment

Exit mobile version