புதிய எபிசோட் எப்பொழுது.? புதிய தொடர்களை அதிரடியாக அறிவித்த விஜய் தொலைக்காட்சி.! சீரியல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.

சீரியல் ரசிகர்கள் சீரியலை பார்க்காமல் கடந்த சில மாதங்களாக தவித்து வருகிறார்கள், இந்த நிலையில் சீரியல்களின் புதிய எபிசோட் எப்பொழுது ஒளிபரப்புவார்கள் என்ற தகவலை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவியதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அதனால் சினிமா படப்பிடிப்பு சீரியல் படப்பிடிப்பு என அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, சுமார் 50 நாட்களுக்கு மேல் தடைபட்டிருந்த சீரியல்கள் புதிய எபிசோட் இல்லாததால் பழைய எபிசோடுகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வந்தது தொலைக்காட்சி நிறுவனங்கள்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சீரியல் படப்பிடிப்பை 60 பேருடன் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது, இதனைத்தொடர்ந்து சீரியல் பணிகளை தொடங்குவதற்காக அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அடுத்த வாரம் முதல் புதிய சீரியல்களின் புதிய எபிசோடுகளை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது, அதுமட்டுமில்லாமல் வரும் வாரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர், பாரதிகண்ணம்மா, காற்றின் மொழி, ஆயுத எழுத்து, நாம்இருவர்நமக்குஇருவர், தேன்மொழி, ஆகிய தொடர்கள் வழக்கம்போல் புதிய எபிசோட் ஒளிபரப்பப்படும் நேயர்கள் தவறாமல் கண்டு மகிழலாம் என அறிவித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஜூன் எட்டாம் தேதி முதல் செந்தூரப்பூவே என்ற புதிய மெகா சீரியலை ஒலிபரப்ப இருக்கிறது விஜய் தொலைக்காட்சி இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும், மேலும் இந்த சீரியல் காதல் மற்றும் முழுக்க முழுக்க குடும்ப கதையை சேர்ந்த சீரியல் ஆகும், இந்த சீரியலின் கதை நடுத்தர வயது 45 வயதுடைய துரை சிங்கத்தை பற்றிய கதை இவர் மனைவியை இழந்தவர் ஆவார்.

துரைசிங்கம் மறுமணம் பற்றி யோசிக்காமல் இருப்பார் ஆனால் அவரது தாய் மறுமணம் செய்துகொள்ள வலியுறுத்துகிறார் அதன் காரணமாக ரோஜாவை திருமணம் செய்து கொள்கிறார், இவர்கள் இருவருக்கும் பெரிய வயது வித்தியாசம் இருக்கிறது அதையும் மீறி இவர்கள் எப்படி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது இந்த ‘செந்தூரப்பூவே’ மெகா சீரியல்.

இதில் தொழிற்சங்கமாக ரஞ்சித் முதன்முதலாக சீரியலில் நடித்துள்ளார் இவர் இதற்குமுன் பாண்டவர் பூமி, நேசம் புதுசு, ஆகிய திரைப்படங்களில் நடித்தவர்.

Leave a Comment