சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு மாறிய பிரபலம்.!

0
sun-tv-vijay
sun-tv-vijay

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்களுக்கு பிடித்த சீரியலாக இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தது அந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து வந்தார்கள். அதைத்தொடர்ந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் சூப்பர் ஹிட் சீரியலாக வளர்ந்து வந்தன.

இதனைத்தொடர்ந்து பூவேஉனக்காக சீரியலில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சில காரணங்களால் சீரியலை விட்டு பாதியிலேயே வெளியேறினார். அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் அன்று வெளியேறிய நிலையில் அதன் பிறகு ஹீரோ கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக அசீம் நடிக்கத் தொடங்கினார். ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருணை ரசித்து வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் சன் டிவியில் நடித்து வெளியேறிய அருண் ஒரு வெப்சீரிஸில் நடித்து வந்தார். அதுவும் ஒரு பிரபல ஓடி டியில் வெளியாகியிருக்கிறது. நடிகர் அருண், இவருக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வந்தார்கள்.மேலும் பூவே உனக்காக சீரியல் தொடர்வாரா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். அருண் பூவேஉனக்காக சீரியலில் தொடர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வந்த தகவல் நடிகர் அருண், விஜய் டிவிக்கு தாவியதாகவும் சொல்லப்படுகிறது. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக களமிறங்கியிருக்கிறார். என்று அதை அவரே தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கிறார். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

எனவே, பூவேஉனக்காக சீரியலில் நடித்ததில் நடிகர் அருணுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தார்கள். அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடிப்பதுக்கும் ரசிகர்கள் அவர்களின் ஆதரவை கொடுப்பார்கள். என்று அருண் விஜய் டிவியில் தனது காலை பதிக்கிறார். இதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.